Hormonal Imbalance: பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை என்றால் என்ன? அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.. விபரம் உள்ளே..!
பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன்கள் சமநிலையின்மையின் அறிகுறிகள் பற்றியும், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
டிசம்பர் 30, சென்னை (Health Tips): ஹார்மோன் குறைபாடு, பரம்பரை நோயல்ல. பெண்களுக்கு எந்த வயதிலும் ஹார்மோன் சமநிலையின்மை (Hormonal Imbalance in Women) ஏற்படலாம். ஹார்மோன்கள் என்பது நமது உடலில் உட்சுரப்பியல் சுரப்பிகள் மூலம் சுரக்கும் ரசாயனங்கள் ஆகும். ஹார்மோன்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் சில உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
ஹார்மோன் சமநிலையின்மை:
பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை பத்து வயது முதல் இருந்தே ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த சமநிலையின்மை காரணமாக, உடல் எடை கூடுவது, மன உளைச்சல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய், மனச்சோர்வு, அதிக தூக்கம், தாம்பத்ய வாழ்க்கையில் ஆர்வமின்மை என பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். இதனால் மாதவிடாய் காலத்தில், சீரான ரத்தப்போக்கு இருக்காது. முதல் இரண்டு நாட்களிலேயே ரத்தப்போக்கு நின்றுவிடுவது அல்லது மாதவிடாய் காலம் முடிந்தும் அதிகமான ரத்தப்போக்கு வெளியேறுவது போன்றவைகள் ஏற்படும். திருமணமான பெண்களுக்கு, ஹார்மோன் சமநிலையின்மை, கருத்தரிப்பதில் சிக்கல், கருவில் இருக்கும் சிசுவின் வளர்ச்சியில் குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்தும். Namakkal Anjaneyar: 1,00,008 வடை மாலை அலங்காரத்தில் தோற்றமளித்த நாமக்கல் ஆஞ்சநேயர்; அனுமன் ஜெயந்தி சிறப்பு அலங்காரம்..!
முப்பது வயதைக் கடந்தவர்களுக்கு உடல் பருமன் ஏற்படும். ஹார்மோன் குறைபாட்டால், பெண்களுக்கு பெரும்பாலும் ஏற்படும் நோய் தைராய்டு. இந்த நோயில், இரண்டு வகைகள் உண்டு. ஹைபர் தைராய்டு (Hyper thyroidism) மற்றும் ஹைபோ தைராய்டு (Hypothyroidism). இதனால் பெண்களுக்கு ஏற்படும் மற்றொரு நோய் பிசிஓடி என்கிற பாலிசிஸ்டிக் ஓவரி நோய். இந்த தாக்கத்தால், முகத்திலும் கைகளிலும் முடி வளர்வது, மனநிலை மாற்றங்கள், மன உளைச்சல், முடி உதிர்வது, எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும். ஹார்மோன் குறைபாடு காரணமாக, இந்த இன்சுலின் சுரப்பி சுரக்காமல் போகலாம். இதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படலாம்.
ஹார்மோன் சமநிலையின்மைக்கு எந்த சுரப்பில் சமநிலையின்மை ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கான தீர்வு காண்பதே சரியான வழிமுறை. இதை, ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து, தகுந்த சிகிச்சை பெறுவது அவசியம். பீட்சா, பர்கர் பதப்படுத்திய குளிர்பானங்கள், துரித உணவுகள் போன்ற உணவுகளைத் தவிர்ப்பதும் பச்சைக் காய்கறிகளை அதிகமாக உண்பதும் இன்றைய காலகட்டத்தில் ஹார்மோன் சமநிலையின்மையில் இருந்து ஓரளவு காக்கும்.