Morning Food: அச்சச்சோ.. காலை உணவை தவிர்க்கிறீர்களா?.. உடல் நலனுக்கு மிகப்பெரிய எதிரி.!
இதய பாதிப்பு, வளர்ச்சி தடைபடுதல் உட்பட பல்வேறு சிரமங்களை நாம் காலை உணவைத் தவிர்க்கும்போது எதிர்கொள்ள நேரிடும்.
அக்டோபர் 14, சென்னை (Health Tips): ஒவ்வொரு நாளின் தொடக்கத்தையும், முடிவையும் நாம் உணவை கொண்டு நிறைவு செய்கிறோம். இது அன்றாட பணிகளை நாம் செய்ய தேவையான உடல் ஆற்றலை வழங்குகிறது. இந்த உடல் ஆற்றல் கிடைக்கப்பெறும் பட்சத்திலேயே, நமது பணிகள் தொடர்ந்து சிரமம் இன்றி செய்ய இயலும். அதே நேரத்தில், நாம் காலை உணவை எதோ ஒரு காரணத்திற்காக தவிர்ப்பது நல்லது கிடையாது.
காலை உணவை தவிர்ப்பது அதிகமாகியுள்ளது:
இன்றளவில் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைகளுக்கு செல்வோர் நேரமின்மை பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இரவு நேரங்களில் செல்போன், டிவி பார்ப்பது என இருந்துவிட்டு தாமதமாக உறங்கி, பின் காலையில் நேரம் கழிந்து எழுந்து அவசர கதியில் தங்களின் இலக்குகளை நோக்கி ஓட்டமெடுக்கின்றனர். ஆனால், அந்த ஓட்டத்திற்கு தேவையான சத்துக்களை வழங்கும் உணவுகளை எடுத்துக்கொள்வது இல்லை.
நேர்மறை விளைவு ஏற்படும்:
இன்னும் ஒருசிலரோ காலை நேரத்தில் உணவை சாப்பிட நேரமில்லை என்று கூறி கடைகளுக்கு சென்று ஒரு டீ, பிஸ்கட், சிகிரெட் போன்றவற்றை எடுத்துக்கொள்கின்றனர். இதனால் அவர்களின் உடல்நலம் மெல்ல அழியத் தொடங்குகிறது. இந்த எதிர்மறை விளைவானது, குறிப்பிட்ட நபரின் எதிர்காலத்தை மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு கொண்டு சென்று நிறுத்திவிடுகிறது. இன்று காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள். இதன் வாயிலாக உங்களின் எதிர்காலம் சிறக்க உதவும். King Cobra: ராஜநாகத்தை அசால்ட்டாக டீல் செய்யும் நபர்; பார்க்கவே மெய்சிலிர்க்கவைக்கும் காணொளி.!
உடல்சோர்வு தொடரும்:
காலையில் நாம் உணவை தவிர்த்து வருவது உடல்நலனுக்கு நேரடியாக பல்வேறு தீங்குகளை ஏற்படுத்தும். உடல் சோர்வு, பலவீனமாக உணருதல் போன்றவை ஏற்படும். ஏனெனில் நமது உடலுக்கு ஆற்றல் கிடைக்காமல், அன்றைய நாள் முழுவவதும் உடற்சோர்வு பிரச்சனை நீடிக்கும். நமது மூளைக்கு தேவையான குளுக்கோஸ், நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்து உறிஞ்சு வழங்கப்படுகிறது.
உடற்பருமனுக்கு வழிவகை:
காலை உணவை நாம் தவிர்ப்பது, மூளைக்கு போதுமான அளவு குளுக்கோஸ் கிடைக்காமல் கவனம் சிதறும். அதேபோல, எரிச்சல், மனஅழுத்தம், பசி, தலைவலி போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். வயிற்றில் புண்கள் ஏற்பட்டு பின்னாளில் செரிமானக்கோளாறுகள் உண்டாகும். காலை நேரத்தில் நாம் உணவை தவிர்த்துவிட்டு, மதியம் மற்றும் இரவு வேளைகளில் அதிக உணவை எடுத்துக்கொள்ளுதல் உடற்பருமனுக்கு வழிவகை செய்யும்.
வளர்ச்சி தடைபடும்:
டைப் 2 சார்ந்த நீரழிவு பிரச்சனை, இதய நோய்கள் அபாயம் அதிகரித்தல், ஊட்டச்சத்து கிடைக்காமல் உடல்நலம் குன்றுதல், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான வளர்ச்சி தடைபடுதல் போன்றவைகள் சங்கிலித்தொடர் விளைவுகளாக ஏற்படும்.