Benefits Of Curry Leaves: கறிவேப்பிலையில் உள்ள நன்மைகள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
கறிவேப்பிலையில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
மே 22, சென்னை (Health Tips): நாம் சமைக்கக்கூடிய பெரும்பாலான சமையல்களில் கறிவேப்பிலை (Curry Leaves) சேர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். கறிவேப்பிலையை வெறும் மணத்திற்காக சேர்க்கக்கூடிய ஒரு இலை என்று நினைக்கிறோம். ஆனால், அதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இதில் கார்போஹைட்ரேட், இரும்புச் சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி, ஏ, பி, இ போன்ற சத்துகளும் நிறைந்து காணப்படுகிறது. மேலும், இது உடலில் உள்ள நோய்களுக்கு எதிராகவும் போராடுகின்றது. Auto-Lorry Accident: லாரி மீது ஆட்டோ மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு..! 6 பேர் படுகாயம்..!
கறிவேப்பிலையில் உள்ள பயன்கள்:
இதில் அதிகளவில் இரும்புச்சத்து மற்றும் போலிக் ஆசிட் நிறைந்து உள்ளதால், ரத்த சோகை பிரச்சனை நீங்குகிறது. பெண்களின் கருப்பையின் சூட்டை குறைக்கின்றது. மேலும், கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கிறது. கொழுந்து கறிவேப்பிலையை (Karuveppilai) உட்கொண்டால், வயிற்றுக் கடுப்பு குணமாகும். கறிவேப்பிலையில் இரும்புச் சத்து, சுண்ணாம்புச்சத்து, தாமிரச் சத்து, புரதச்சத்து, கந்தகச் சத்து, மெக்னீசியம், குளோரின் சத்து ஆகியவைகள் உள்ளதால், இதனை கொத்தமல்லியுடன் சேர்த்து துவையலாக செய்து உட்கொள்ளலாம்.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம். கறிவேப்பிலையை கொத்தமல்லியுடன் சேர்த்து நன்கு அரைத்து, தண்ணீரில் கலக்கி வெறும் வயிற்றில் குடித்துவர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நீங்கும். மஞ்சள், கரிசலாங்கண்ணி கீரைப் பொடி மற்றும் கறிவேப்பிலைப் பொடியை சேர்த்து தண்ணீரில் கலக்கி பருகினால் காச நோய் குணமாகும். இதில், ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. எனவே, இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகின்றது.