Death File Pic (Photo Credit: Pixabay)

மே 22, பாட்னா (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள சோன்பார்சா ரயில் நிலையம் அருகே, நேற்றிரவு ஆட்டோ ஒன்றில் 9 பேரை ஏற்றிக்கொண்டு மோகன்பூர் சவுக் பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. சித்தமார்க்கி பகுதி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, ஆட்டோ எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி (Auto Collides With Lorry) விபத்தில் சிக்கியது. German Football Player Retirement: பிரபல கால்பந்து வீரர் ஓய்வு பெற போவதாக அறிவிப்பு..!

இந்த விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். மேலும், அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து படுகாயமடைந்த நிலையில் இருந்த 6 பேரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் தகவல்களை சேகரித்து வருகின்றனர். இதன் முதற்கட்ட விசாரணையில், ஆட்டோ அதிவேகமாக சென்றது தான் இந்த விபத்து ஏற்பட காரணமாக இருந்துள்ளது கண்டறியப்பட்டது. இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.