Bone Health: எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவு முறைகள்..!
உடலுக்கு வலுசேர்க்கவும், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சாப்பிட வேண்டிய உணவு முறைகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.
ஜூன் 25, சென்னை (Health Tips): நமது உடலில் எலும்புகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை நமது உடலுக்கு ஆதரவு, பாதுகாப்பு மற்றும் உடல் இயக்கத்துக்கு உதவுகின்றன. எலும்பு ஆரோக்கியம் கையாளப்படாததால், ஆஸ்டியோபோரோசிஸ், எலும்புகள் உடைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அதனால், நம் எலும்பு ஆரோக்கியமாக இருந்தால்தான், நம் வாழ்க்கை முழுவதுமாக வாழ முடியும். அதற்கு அதனை வலுப்படுத்தக்கூடிய சிறந்த உணவுகளை (Foods To Improve Bone Health) நாம் சாப்பிடுவது மிகவும் அவசியம் ஆகும். Consumer Court Judgement: ரயில் பயணத்தில் உடைமைகளை இழந்த பயணிக்கு ரூ. 1 லட்சத்துக்கு மேல் வழங்க வேண்டும்; நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு..!
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்:
பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. தயிரில் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்து காணப்படுகிறது. கால்சியம் மற்றும் ப்ரோபையோடிக்ஸ் மோரில் உள்ளது.
சின்ன வெங்காயத்தில் உள்ள வைட்டமின் கே மற்றும் சி எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. முருங்கைக் கீரையில் நிறைந்துள்ள கால்சியம் மற்றும் இரும்புச் சத்து எலும்பு வலுவடைய செய்கிறது.
அனைத்துவிதமான பயறு வகைகளை உட்கொள்வதன் மூலம், அதிலிருந்து புரதம் மற்றும் கால்சியம் கிடைக்கும். சேனைக்கிழங்கில் கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்து காணப்படுவதால் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அவல் சாப்பிடுவதால் அதில் புரதம் மற்றும் மினரல்கள் கிடைக்கிறது. முந்திரி சாப்பிடுவதாலும் எலும்பு வலுவடையும். மேலும், பாசிப்பருப்பில் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்ததுள்ளது.
வெண்டைக்காயில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் சி, கத்தரிக்காயில் உள்ள மினரல்கள் மற்றும் வைட்டமின்கள், முட்டையில் உள்ள புரதம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கிய உணவு பொருட்கள் ஆகும்.
இந்த உணவுகளை தினமும் உட்கொள்வதன் மூலம், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.