Ash Gourd Juice Benefits: வெண்பூசணி சாறை தினமும் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

வெண்பூசணி சாறை பருகி வருவதால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காண்போம்.

Ash Gourd Juice (Photo Credit: Wikipedia | YouTube)

ஜூன் 26, சென்னை (Health Tips): ஆரோக்கியமான உணவுப் பொருட்களை நம்முடைய அன்றாட உணவு பழக்கமாக உட்கொள்ளும் பொழுது, நம் உடலுக்கு பல அற்புதமான நன்மைகள் ஏற்படுகிறது. இது பல நோய்களை தடுத்து ஆரோக்கியம் அளிக்கிறது. அந்தவகையில் வெண்பூசணி சாறை (Ash Gourd Juice) நாம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகுவதன் மூலம் கிடைக்கும் பயன்கள் என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். குளிர்ச்சி தன்மை உடைய வெண்பூசணியை சைனஸ் பிரச்சனை இருப்பவர்களும், சளி அடிக்கடி பிடிக்கும் என்று கூறுபவர்களும் சற்று கவனத்துடன் சாப்பிட வேண்டும்.

வெண்பூசணியில் உள்ள பயன்கள்:

வெண்பூசணியின் சதைப்பகுதியை தான் நாம் பொதுவாக அரைத்து சாறு பிழிந்து குடிப்போம். ஆனால், வெண்பூசணியின் விதைகளிலும் நமக்கு பல நன்மைகள் இருக்கின்றது. அதனால் சாறு எடுக்கும் பொழுது வெண்பூசணியில் இருக்கக்கூடிய கடினமான தோல் பகுதியை மட்டும் நீக்கிவிட்டு, அதன் விதைகளோடு சேர்த்து சாறு எடுத்து வடிகட்டி குடிப்பது மிகவும் நல்லது.

தினமும் வெண்பூசணி சாறை குடிப்பதன் மூலம், மூளை மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்யும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கக்கூடிய இனப்பெருக்கம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்குவதற்கு இந்த வெண்பூசணி சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  Zomato Delivery Boy Steal Customer Package: உணவு டெலிவரி செய்ய வந்த நபர், உணவு பொட்டலத்தை திருடும் காட்சி வைரல்..!

உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் மிக்க இந்த வெண்பூசணி சாறை பெண்கள் தொடர்ச்சியாக எடுக்கும் பொழுது உடல் சூட்டினால் ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதல், அதிக அளவு ரத்தப்போக்கு போன்றவை குறையும்.

வெண்பூசணி சாறு, கட்டிகளை கரைக்கும் தன்மை உடையது. மேலும், புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் வல்லமை இதற்கு உள்ளது. வெண்பூசணி சாறை தினமும் பருகிவருவதன் மூலம் டைப் 2 நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும். இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.

இது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மேலும், சிறுநீரகம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்து, கழிவுநீரை வெளியேற்றுவதற்கு உதவுகின்றது. உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக வெண்பூசணி சாறு திகழ்கின்றது.

இதில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் ஜீரண சக்தியை அதிகரித்து மலச்சிக்கலை தடுக்கிறது. மேலும், இதில் குளிர்ச்சி தன்மை அதிகம் இருப்பதால், மூலம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு அரு மருந்தாக இருக்கிறது.

பொடுகு பிரச்சனை இருப்பவர்கள், வெண்பூசணி சாறை தலையில் தடவுவதன் மூலம் பொடுகு பிரச்சனை முற்றிலும் நீங்கி தலையில் ஏற்படக்கூடிய அரிப்பையும் கட்டுப்படுத்த உதவுகின்றது. உடலில் அதிகளவில் எரிச்சல் இருப்பவர்கள் வெண்பூசணி சாறை உடலில் தேய்த்து வர உடல் எரிச்சல் குறையும்.