Zomato Delivery Boy Steal Customer Package: உணவு டெலிவரி செய்ய வந்த நபர், உணவு பொட்டலத்தை திருடும் காட்சி வைரல்..!

பெங்களூருவில் சொமாட்டோ நிறுவன டெலிவரி நபர் மற்றொரு உணவு பொட்டலத்தை திருடிச் செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது வைரலாக பரவி வருகிறது.

Zomato Delivery Boy Steal Customer Package: உணவு டெலிவரி செய்ய வந்த நபர், உணவு பொட்டலத்தை திருடும் காட்சி வைரல்..!
Zomato Delivery Boy Steal Package (Photo Credit: @adityakalra X)

ஜூன் 26, பெங்களூரு (Karnataka News): பிரபல சொமாட்டோ (Zomato) நிறுவனத்தின் டெலிவரி செய்ய வந்த நபர் ஒருவர், வாடிக்கையாளரின் பேக்கேஜை திருடிச் சென்ற சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ வைரலானதை அடுத்து, சொமாட்டோ நிறுவனம் மன்னிப்புக் கோரியது. Women T20 Asia Cup 2024 Schedule: மகளிர் டி20 ஆசியக் கோப்பை 2024 தொடர் அட்டவணை வெளியீடு; முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானுடன் மோதல்..!

பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டில் ஆதித்யா கல்ரா, தனது ஆர்டரை Zomato டெலிவரி பாய் ஒருவர் டெலிவரி செய்ததாக கூறினார். ஆனால், அவர் கதவுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த மற்றொரு உணவுப் பொருளை எடுத்துச் செல்லப்பட்டது, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது, சமூக ஊடகங்களில் அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், Zomato Care மன்னிப்பு கேட்டதுடன், இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 26, 2024 12:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).