Ginger Juice Benefits: இஞ்சி சாறு பருகுவாதல் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
உடல் ஆரோக்கியத்திற்கும், செரிமான பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக உள்ள இஞ்சி சாறில் இருக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
ஜூன் 22, சென்னை (Health Tips): இஞ்சி உணவில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருளாகும். இது உணவின் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிக்க பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது. உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நமது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. செரிமானத்தை மேம்படுத்துவதில் இது மிகச் சிறந்தாக உள்ளது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி சாறு (Ginger Juice) குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இதில் பார்ப்போம்.
குமட்டலை தடுக்கும்: மலச்சிக்கல், வாயுத்தொல்லை, வயிற்றுவலிக்கு இஞ்சி சாறு சிறந்தது ஆகும். கர்ப்ப காலத்தில் காலை சுகவீனத்தைத் தடுப்பதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாதவிடாயின் போது ஏற்படும் வலியை சரிசெய்யும். Pandit Laxmikant Dixit Passed Away: அயோத்தி ராமர் கோவில் கும்பாவிஷேகத்தில் தலைமை அட்சகராக பணியாற்றிய பண்டித் லட்சுமிகாந்த் தீட்சித் மரணம்.. சோகத்தில் பக்தர்கள்.!
இரத்த சர்க்கரை அளவு: இஞ்சி சாறு இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வேகமாக குறைக்கின்றது.
கொலஸ்ட்ரால்: இஞ்சி எல்.டி.எல் அளவைக் குறைப்பதற்கும், எச்.டி.எல் அளவை அதிகரிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த இஞ்சி சாறு இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதிக அளவு எல்டிஎல் கொலஸ்ட்ரால் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கின்றது. கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க இஞ்சி சாறு உதவுகின்றது.
நோய் எதிர்ப்பு சக்தி: தினசரி உணவில் இஞ்சி சாறு சேர்த்துக்கொள்வது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது பருவகால நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றது. உணவில் இஞ்சி சேர்த்துக்கொள்வது மூட்டுவலியைக் குறைக்கும்.
செரிமானம்: இஞ்சி சாற்றின் மிகப்பெரிய நன்மையாக செரிமானத்தை மேம்படுத்துகிறது. வயிற்று வலிக்கு இது மிகவும் பயனுள்ள தீர்வாகும். இஞ்சி சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது சிறந்தது. செரிமானப் பிரச்சனைகள் இருப்பின் இஞ்சிச் சாறு சிறிது அருந்தினால் சரியாகிவிடும்.
கெட்ட சுவாசம்: வாய் துர்நாற்றம் உள்ளவர்கள், இஞ்சி சாறு அருந்த வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி, வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.
குறிப்பாக, இஞ்சி சாறில் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பினும், அதை அதிகமாக பயன்படுத்தக் கூடாது. ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவரை அணுக வேண்டும்.