ஜூன் 22, அயோத்தி (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் இந்த ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற்றது. இதில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற 121 வேத பிராமணர்களுக்கு தலைமை தாங்கிய காசியின் தலைமை அர்ச்சகர் (Chief Priest Of Khasi) பண்டிட் லக்ஷ்மிகாந்த தீட்சித் (Pandit Laxmikant Dixit), இன்று காலை மரணமடைந்தார். Farah El Kadhi Died In Heart Attack: துனிசிய அழகுப் பெண்மணி ஃபரா எல் காதி திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
இந்த தகவல் அறிந்த காசி மக்கள் அனைவரும் பெரும் சோகத்தில் மூழ்கினர். இவர், அயோத்தியில் ராமர் கோவிலின் பிரான் பிரதிஷ்டை பூஜையில் முக்கிய பங்கு வகித்தார். அவர் தலைமையில் அனைத்து பூஜைகளும் நடைபெற்றது. இவரது மகனும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் வழிபாட்டில் கலந்து கொண்டனர். இதுதவிர, 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் காசி விஸ்வநாதர் திறப்பு விழாவுக்கான பூஜையிலும் இவர் பங்கேற்றார்.
பண்டிட் லக்ஷ்மிகாந்த் தீட்சித்தின் குடும்பத்தினர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'இன்று காலை உடல்நிலை திடீரென மோசமடைந்ததாகவும், சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அவர் இந்திய சனாதன கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளவர். மேலும், அவர் எப்போதும் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உணர்வை மக்களுக்கு தெரிவிப்பார்.
VIDEO | Pandit Laxmikant Dixit, who led Ayodhya Ram Temple 'Pran Pratistha' ceremony, passed away in Varanasi earlier today
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/cUrFCsMThM
— Press Trust of India (@PTI_News) June 22, 2024