Avarakkai Benefits: அவரைக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

அவரைக்காயில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.

Broad Beans (Photo Credit: Facebook)

ஜூலை 11, சென்னை (Health Tips): நாம் அவரைக்காய் என்று அழைத்தாலும் அது ஒரு பீன்ஸ் அல்லது பட்டாணி வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். அவரைக்காய் (Broad Beans) சாதாரணமாக கிடைக்கும் காய் வகையாகும். இதில் பல வகைகள் இருந்தாலும், இதனால் ஏற்படும் பலன்கள் ஒன்று போலவே இருக்கும். இருப்பினும், இதில் மருத்துவ முறைக்கும், பத்திய உணவு பழகத்திற்கும் பச்சை நிற அவரைப் பிஞ்சுகளே சிறந்ததாக கருதப்படுகின்றது. அவரைக்காய் சுவையான உணவு என்பதை அனைவரும் அறிவோம். இதுதவிர அவரைக்காயில் (Avarakkai) உள்ள பல மருத்துவ குணங்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

இதயத்திற்கு நல்லது: பொதுவாக நாம் உண்ணக்கூடிய அவரையில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது. இதனால் நமது இதயம் ஆரோக்கியமாக செயல்படுகிறது.

எடை குறைப்பு: அவரைக்காயில் புரதச்சத்து இருப்பதால் இதனைத்தொடர்ந்து உணவில் சேர்த்து கொள்வதினால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைகின்றது. இதனால் உடல் எடையும் குறையும் என பல ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

நோய் எதிர்ப்புசக்தி: இதில் வைட்டமின் பி1, இரும்புச்சத்து, காப்பர், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், ஃபோலியேட், மாங்கனீசு போன்ற பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. Teacher Arrested For Beating Student: வீட்டுப்பாடம் செய்யாததால் ஆத்திரம்; மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் கைது..!

இரத்த அணுக்களை அதிகரிக்கிறது: அவரையில் உள்ள அதிகப்படியான இரும்புச் சத்து நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மிகவும் உதவுகின்றது.

நுரையீரலுக்கு நல்லது: நமது நுரையீரலிலிருந்து மற்ற செல்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கு இரும்புச் சத்து மிகுந்த ஹீமோகுளோபின் உதவுகின்றது. அவரையில் அதிக இரும்புச்சத்து உள்ளதால் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நம் நுரையீரலுக்கு நல்ல பயனை அளிக்கும்.

மலச்சிக்கல்: அவரையில் உள்ள நார்ச்சத்து நாம் உட்கொள்ளும் உணவினை நன்கு செரிமானம் செய்து, மலச்சிக்கல் பிரச்சனையை தவிர்க்கிறது.

எலும்புகளின் வளர்ச்சிக்கு: பொதுவாக நமது எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு அதிகமாக தேவைப்படும் கால்சியம் அவரைக்காயில் அதிகமாக உள்ளது.