Arrest (Photo Credit: Pixabay)

ஜூலை 11, ரேபரேலி (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், ரேபரேலியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கோடை விடுமுறை (Summer Holidays) முடிந்து மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஜூலை 09-ஆம் தேதி அன்று, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்தும் ஆசிரியரான முகமது ஆசிப், கோடை விடுமுறையில் கொடுத்த வீட்டுப்பாடம் (Homework) குறித்து மாணவர்களிடம் கேட்டுள்ளார். Two Killed in Train Engine Collision: ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்; வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் பலி..!

அப்போது, வகுப்பில் உள்ள ஒரு மாணவன் தனது தனிப்பட்ட சில காரணங்களால் வீட்டுப்பாடத்தை முடிக்க இயலவில்லை எனக் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியர் அந்த மாணவனை பிரம்பால் கொடூரமாக தாக்கியுள்ளார், இதில், அந்த மாணவனின் வாய், பல் மற்றும் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த மாணவன் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்தார். மாணவன் மயங்கி விழுவதை கண்ட ஆசிரியர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். உடனே, சக மாணவர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து தகவல் கொடுத்தனர். உடனடியாக வந்த தலைமை ஆசிரியர் அந்த மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர், இதுதொடர்பாக மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மாணவனின் தந்தை அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள ஆசிரியரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்றைய தினம் ஆசிரியர் முகமது ஆசிபை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.