Medicinal Properties Of Sandalwood: நறுமணம் அளிக்கும் சந்தனத்தில் உள்ள மருத்துவ குணங்கள்..!
சரும பராமரிப்பு மற்றும் நறுமணம் தரும் சந்தனத்தில் உள்ள மருத்துவ பயன்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
மே 30, சென்னை (Health Tips): சந்தனமரம் மரவகைகளில் மிக விலை உயர்ந்த மரமாகும். இலைகள் மூலம் குளிர்ச்சியை வெளியிடுகிறது. இதன் காரணமாக, சந்தன மரங்கள் (Sandalwood) வளரும் இடங்களில் மழைப் பொழிவு ஏற்படுகிறது. சந்தன மரக்கட்டைகள்தான் அதிக பயன் தருகின்றன. சந்தன விதைகள் மருத்துவத்தில் பயன்படுகின்றன. வெள்ளை சந்தன மரக்கட்டைகள் சரும அழகு மற்றும் உடல் உள்ளுறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகின்றன.
சந்தனத்தின் மருத்துவ பயன்கள்:
அரோமா தெரபியில் (Aroma Therapy) சந்தன எண்ணெய் மன அமைதியை ஏற்படுத்தி, மன அழுத்த பாதிப்புகளை போக்கவும், உடல் சரும வியாதிகளை குணப்படுத்தவும் பயன்படுகின்றன. இது உடல் சூட்டைத் தணிக்கும்.
சந்தனத்தை அரைத்து தலையில் தடவினால், தலையில் கோடைக்காலத்தில் ஏற்படும் கொப்புளங்கள், தலைவலி மற்றும் மூளை, இதய பாதிப்புகளை சரி செய்கின்றது. மேலும், உடல் நிலையை சமநிலையில் வைக்கிறது. Firecracker Explosion: பூரி சந்தன் யாத்திரையில் பட்டாசு வெடித்து சிதறல்; பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..!
தூய சந்தனத்தை நீரில் கலந்து பருகி வர, ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலை குளிர்வித்து, மனதை உற்சாகப்படுத்தி சுறுசுறுப்பை அளிக்கிறது. சந்தனத்துடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து அரிப்பு, தேமல், வீக்கம் உள்ள இடங்களில் தடவினால் அவை குணமாகும்.
சந்தனத்தூளை தண்ணீரில் கரைத்து கொதிக்கவிட்டு, பின் பருகினால் சிறுநீர் எரிச்சல் சரியாகும். உடல் சூட்டினால் உண்டாகும் கண்கட்டி குணமடையும்.
நீரிழிவு நோயாளிகள் சிறிதளவு சந்தனத்தை நெல்லிக்காய் சாற்றுடன் சேர்த்து, தினசரி பருகிவர நீரிழிவு பிரச்னைகள் தீரும். இதய படபடப்பு, உடல்மந்தம் அனைத்தையும் குணமடைய செய்யும்.
சந்தனத்தை, மருதாணி விதைகளோடு கலந்து, தூபம் போட வீடுகளில் நறுமண காற்று வீசுவதுடன் மனம் தெளிவடையும். சந்தன எண்ணெய் உடல் நலனுக்கு பயனாகிறது.
சந்தன எண்ணெய் பக்கவாதம், முடக்குவாதம் போன்ற வாத வியாதிகளுக்கு, உள் மருந்தாக பயனளிக்கிறது. இவ்வாறு, சந்தனம் நமக்கு பலவிதங்களில் பயன்தருகிறது. மேலும், நம் உடலை மேம்படுத்துகின்றது.