Papaya Benefits: பப்பாளியில் உள்ள மருத்துவ பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

சுவை மிகுந்த பப்பாளி பழத்தில் உள்ள நன்மைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காண்போம்.

Papaya (Photo Credit: Pixabay)

ஜூன் 04, சென்னை (Health Tips): பாப்பாளி (Papaya) பொதுவாக எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம் ஆகும். விலை மலிவானது மற்றும் சுவையில் தரம் உயர்ந்தது. இது மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் இருக்கும். இதில், வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய உள்ளது. இதன் முழு மருத்துவ பயன்களை பற்றி இதில் பார்ப்போம்.

பப்பாளி மருத்துவ பயன்கள்:

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து சாப்பிட்டு வர உடல் வளர்ச்சி அதிகரிக்கும். உடலில் எலும்பு வளர்ச்சி, பல் உறுதியாகும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து சாப்பிட்டால், உடல் எடை குறையும்.

நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து, பின் சுடுநீரால் கழுவிவர முகச்சுருக்கம் நீங்கும். முகம் பொலிவு பெறும். Israel Govt Recommends Indian Beaches: இந்திய கடற்கரைகளை பரிந்துரை செய்யும் இஸ்ரேல் அரசு; மாலத்தீவு விவகாரம் அடுத்து அதிரடி அறிவிப்பு..!

தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் சரியாகும். இதனை, தேனில் தோய்த்து சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குறையும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண் மற்றும் புண்கள் மேல் பூச புண்கள் குணமடையும். மேலும், பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் குணமாகும்.

பப்பாளிக்காயின் உட்பகுதித் துண்டுகளை நறுக்கி, அதனை மென்மையாக முகத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கி முகம் பொலிவடையும்.

இதன் விதைகளை அரைத்து, தேள் கொட்டிய இடத்தில் தேய்த்தால் வலி, விஷம் குறையும். பழுக்காத பச்சைப் பப்பாளி சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் நீங்கும்.

கல்லீரல் கோளாறுகளுக்கும், முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கும் பப்பாளி சாப்பிடுவது சிறந்தவையாகும். அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கும் மிகச் சிறந்த தீர்வாக உள்ளது.