Golva Beach Goa (Photo Credit: Pixabay)

ஜூன் 04, இஸ்ரேல் (World News): இஸ்ரேல் நாட்டு குடிமக்களை மாலத்தீவில் நுழைய தடைவிதித்ததை அடுத்து, இஸ்ரேலியர்களை இந்தியாவின் கடற்கரைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு, இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் (Embassy Of Israel In India) இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இந்தியாவில் அன்புடன் வரவேற்கப்படுவதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. IAS Couple Daughter Suicide: ஐ.ஏ.எஸ். தம்பதி மகள் தற்கொலை; கடிதம் எழுதி வைத்துவிட்டு விவரீத முடிவால் சோகம்..!

இஸ்ரேலியர்கள் தங்களது நாட்டில் நுழைய தடை விதித்து, மாலத்தீவு நேற்றைய தினம் அறிவித்தது. இதனைத்தொடந்து, இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம், இந்தியாவின் பிரபலமான கடற்கரைகளில் கோவா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு மற்றும் கேரளாவில் உள்ள சிலவற்றை பரிந்துரை செய்துள்ளது.

மேலும், இது தொடர்பான 'X' தள பதிவில், இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம், 'மாலத்தீவில் இஸ்ரேலியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை அன்புடன் வரவேற்க, சிறப்பான மிகவும் அழகான மற்றும் அற்புதமான இந்திய கடற்கரைகளை எங்களது அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கின்றோம்' என்று அதில் பதிவிட்டுள்ளது.