Sundakkai Benefits: சுண்டைக்காய் செடியில் உள்ள மருத்துவ பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

சுண்டைக்காயில் உள்ள நன்மைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

Sundakkai (Photo Credit: Pixabay)

மே 29, சென்னை (Health Tips): சுண்டைக்காய் செடி தமிழகத்தில் பரவலாக காணப்படும் ஒரு தாவரமாகும். இதனை ஆங்கிலத்தில் 'Turkey Berry' என்று அழைப்பர். இது காடுகளில் தானாகவே வளர்ந்து வருவது மலை சுண்டை என்றும், தோட்டங்களில் நாம் வீட்டில் வளர்ப்பது பால் சுண்டை என்றும் அழைக்கப்படுகின்றது. சுண்டைக்காயில் உள்ள கசப்பு சுவையால், மக்கள் இதனை பெரிதும் விரும்ப மாட்டார்கள். ஆனால், இதில் எண்ணெற்ற மருத்துவ பயன்கள் உள்ளன. அவற்றை இந்த பதிவில் பார்ப்போம். Watchman Arrested: உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி, பெண்ணை மிரட்டிய காவலாளி கைது..!

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:

சுண்டைக்காயில் (Sundakkai) வைட்டமின் பி, சி சத்துகள் அதிகம் உள்ளது. இதன் இலைகள், வேர், கனி என முழுத்தாவரமும் மருத்துவ குணம் கொண்டவையாகும். இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கிறது. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகும்.

இதனை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறையத் தொடங்கும். வாரம் ஒரு முறையேனும் இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.

ஒரு கைபிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கி, மூல நோயால் ஏற்படும் ரத்தக் கசிவு நீங்கிவிடும். மேலும், இதில் கால்சியம் சத்து மிகுந்து காணப்படுவதால் இவை எலும்புகளை வலுவடையச் செய்கிறது.

இதிலுள்ள கசப்புத் தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு, உடலில் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது. உடல் சோர்வு, மூட்டுவலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்தாக உள்ளது.

வறட்டு இருமல், மார்பு சளி, காசநோய், ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள், தினம் 20 சுண்டைவற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து எடுத்து சாப்பிட்டு வர நோய் கட்டுக்குள் வரும்.

முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து, வெயிலில் காயவைத்து பின்பு எடுத்து, அதனை பத்திரப்படுத்திக்கொண்டால் சுண்டைக்காய் கிடைக்காத காலங்களிலும் இதனை பயன்படுத்தலாம்.