Medicinal Benefits Of Marudhani: மருதாணியில் உள்ள மகத்தான மருத்துவ பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
மருதாணி செடியில் என்னென்ன மருத்துவ பயன்கள் உள்ளன என்பதை இந்த பதிவில் காண்போம்.
ஆகஸ்ட் 13, சென்னை (Health Tips): மருதாணி (Henna) செடியின் இலைகள், பட்டை, மலர், கனிகள் ஆகிய அனைத்தும் பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டதாகும். மருதாணி இலையை கைகளில் வைப்பதால், அழகு சேர்ப்பது மட்டுமின்றி, அதன்மூலம் பல்வேறு நன்மைகளும் கிடைக்கிறது. அந்தவகையில், மருதாணியில் (Marudhani Benefits) உள்ள மருத்துவ பயன்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
மருதாணியில் உள்ள மருத்துவ பயன்கள்:
மருதாணி இலை ஒரு கிருமி நாசினி, கண்ணுக்கு தெரியாத கிருமிகளை அழிக்கும். மேலும், நகசுத்தி வராமல் தடுக்கும். மருதாணி இலையை அரைத்து கைகளுக்கு வைத்து வந்தால் உடல் சூட்டை குறைக்கும். Signs of Dehydration: உடலில் நீரிழப்பை உணர்த்தும் காரணங்கள் என்னென்ன? கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டிய விபரம் இதோ.!
கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர, மனநோய் ஏற்படுவது குறையும். மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களின் மூலம் நோய் பரவும் அபாயம் தடுக்கப்படும்.
கால் எரிச்சலைத் தடுக்க மருதாணி இலைகளை அரைத்து பசையாக வைப்பதின் மூலம் சரியாகும். மருதாணி வைத்துக்கொண்டால் சிலருக்கு சளி பிடிக்கும். இதனை தடுக்க மருதாணி இலைகளை அரைக்கும்போது, அது கூடவே 7 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இளநரையை பிரச்சனைக்கு மருதாணி நல்ல பயனை அளிக்கும். மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் தீர்வு காணலாம். இதன் இலைகளை நைசாக அரைத்து வடை போல் தட்டி நிழலில் உலர்த்தி தேங்காய் எண்ணெயில் போட்டு, தலையில் தேய்த்து வர இளநரை மறையும்.
மருதாணி இலையை அரைத்து பசையாக்கி, தீக்காயங்கள் கொப்புளங்கள் மீது பூசினால் அவை குணமாகும். இந்த இலையை சுடுநீரில் ஊறவைத்து, வடிகட்டிய நீரை வாயில் ஊற்றி கொப்பளித்து வந்தால், வாய்ப்புண் குணமாகும்.