Heart Health Tips: இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!
இதயம் சம்மந்தமான நோய்களில் இருந்து விடுபட மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.
மே 23, சென்னை (Health Tips): இதயம் நம் உடலில் மிக முக்கியமான பகுதியாகும். அதனை சரியாக பராமரிப்பது நமது கடமையாகும். இதயம் சம்மந்தமான நோய்கள் கொலஸ்ட்ரால், பிபி, சர்க்கரை நோய் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு வர வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையில், இதயத்தை ஆரோக்கியமாக (Heart Health) வைத்திருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். ATM Machine Issue: ஏ.டி.எம். எந்திர கோளாறு; 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வெளியீடு..! வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!
இதய ஆரோக்கியம்:
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
பாஸ்ட் புட் மற்றும் ஓட்டல்களில் வாங்கி சாப்பிடும் உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டில் செய்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நல்லது. மேலும், பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம். இதனால் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணலாம்.
சிறந்த இதய ஆரோக்கியத்திற்கு உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாகும். எனவே, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடல் பருமனுக்கு வழிவகுக்கும் உணவு பழக்கங்களில் இருந்து விடுபட வேண்டும்.
கொலஸ்ட்ரால் (Cholesterol) மற்றும் உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள், உணவின் அளவை சீராக வைத்துக்கொள்ளவும். இதய நோய் வர இது ஏதுவாக அமையும். எனவே, இதனை கவனமாக கையாள வேண்டும்.
மேலும், மன அழுத்தம் பல வகையான நோய்களை ஏற்படுத்தக் கூடும். மன அழுத்தத்தை சரியாக நிர்வகிப்பதன் மூலம், பல நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.