Reason for Lack of Water: உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படுவது எதனால்?.. சரி செய்வது எப்படி?.! அசத்தல் டிப்ஸ் இதோ.!!

புவியின் படைப்பில் உள்ள பல அதிசியங்களை போல, இயற்கையின் படைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தவல்லது. நமது உடலின் செயல்பாடுகளை நாம் கவனித்தாலே நன்கு அவை புரியவரும். இன்று உடலில் நீர்சத்து குறைவது தொடர்பான விஷயம் குறித்து காணலாம்.

Lack of Water | Girl Drinking Water (Photo Credit: Pixabay)

டிசம்பர் 13, சென்னை (Chennai): நமது உடலின் இயக்கத்திற்கு, உடல் பாகங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உடலில் ஆற்றல் குறையும்போது, இயக்கத்திலும் பாதிப்பு ஏற்படும். நமது வாயில் மூன்று ஜோடி அளவிலான எச்சில் சுரப்பிகள் இருக்கின்றன. இவை சரிவர வேலை செய்யாமல், எச்சிலை சுரக்காமல் இருக்கும் பட்சத்தில் நாக்கு மற்றும் உதடுகள் வறண்டு போகும். வாயும் வறண்டு அதிக தாக உணர்வானது ஏற்படும்.

காரணங்கள் என்னென்ன?: இவ்வாறாக எச்சில் சுரக்காமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்களும் இருக்கின்றன. உடலில் நீர்ச்சத்து குறைவது, கதிர்வீச்சு பிரச்சனை, நீரழிவு நோய்க்கான மருந்து எடுத்துக் கொள்ளும் மருந்து போன்றவை காரணமாக நீர் சத்தானது குறைகிறது. அதேபோல, கழுத்துப் பகுதியில் இருக்கும் புற்றுநோய்காக சிகிச்சை எடுக்கும் நபர்கள், வைட்டமின் ஏ மற்றும் பி2 சத்து குறைபாடு கொண்டவர்கள், சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்காதவர்கள், மனரீதியான பிரச்சினை உள்ளவர்கள், அவ்வப்போது பதற்றம் மற்றும் பயத்துடன் இருக்கும் நபர்கள், எளிதில் வியர்வை வெளியேறும் பிரச்சனைக்கு உண்டானவர்கள், வயிற்றுப்போக்கு பிரச்சனையை எதிர்கொண்டவர்களுக்கும் நீர்ச்சத்து குறையும். Customs Seized Gold Bars:ரூ.83 இலட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த பயணி கைது: தாய்லாந்தில் இருந்து வந்தரவரை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள்.! 

மது-புகை கேடுதரும்: இதனை சரி செய்ய அவ்வப்போது நமது உடலுக்கு தேவையான நீரை குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவவர்கள், அவசரத்திற்கு புளிப்பு மிட்டாய் சாப்பிடுவது நல்லது. இதனால் வாயில் எச்சில் ஊறும். அதேபோல, மது, புகையிலை போன்ற பழக்கம் இருந்தால் அதனை நிறுத்தி விட வேண்டும். செயற்கை ரசாயனம் கலக்கப்பட்ட குளிர் பானங்கள், காபி, டீ போன்றவற்றையும் குடிக்க கூடாது.

வறட்சி சரியாக: நள்ளிரவில் திடீரென நாவறட்சி ஏற்பட்டால், அவை கவனிக்க வேண்டிய ஒன்றாகும். அடிக்கடி நாவறட்சி ஏற்பட்டு பாதிக்கப்படுவோர், உடலில் நீர்ச்சத்தை உறுதி செய்ய படுக்கை அறையில் நீர் வைத்துக் கொண்டு உறங்குவது நல்லது. சரியான அளவில் உடலில் நீரில்லாத பட்சத்தில், அது சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும். உடலில் நீர்ச்சத்து இருந்தால் மட்டுமே மூட்டுகளை நீட்டி மடக்கை இயலும். அவை குறைந்தால் உடல்நலக்கோளாறுகள் அடுத்தடுத்து ஏற்படும். நமது உடல் தினமும் கழிவு பொருட்களை சிறுநீர், வியர்வை, மலம் போன்றவை வழியாக வெளியேற்றுகிறது. உடல் சீராக இயங்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் நீர்ச்சத்து என்பது உடலில் அவசியம். உடலுக்கு நீர்சத்து வழங்கும் தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை அவ்வப்போது சாப்பிடுவதும் நல்லது.

நீரின்றி அமையாது உலகு என்பதைப்போல, உடலும் நீரின்றி இயங்காது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement