Earth Day 2025: பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள்: உலக பூமி தினம் 2025 இன்று..!

சர்வதேச அளவில் நாம் வாழும் பூமிக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், அதனை எதிர்கால சந்ததிக்கு பத்திரமாக கொடுத்து செல்வதை உறுதி செய்யவும் உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது.

World Day 2025 (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 22, சென்னை (Chennai): நிலம், நீர், காற்று, ஆகாயம், பூமி என்ற பஞ்சபூதத்தின் ஒருங்கே அமைந்த தொகுப்பில் நாம் வாழ்ந்து வருகிறோம். நாம் வாழும் பூமி வரலாற்றில் பல மாற்றங்களை சந்தித்து இருக்கிறது. பூமியில் மனித குலத்தின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு பின்னர் நாம் கண்ட வளர்ச்சிகள் ஏராளம். அதே நேரத்தில், நமது சுற்றுப்புற சூழலில் தன்மை என்பதும் படுமோசமான நிலைமைக்கு சென்றது. புதிய பொருட்களின் தயாரிப்பு, அதற்கு தேவையான பொருட்களின் கனிமங்கள் என ஒருபக்கம் அழிவு, மறுபக்கம் வளர்ச்சி என இயற்கை சமநிலையின்மை பிரச்சனை அதிகரித்துள்ளது. இதனால் உலகளவில் இயற்கை பேரிடர்களும் ஏற்பட்டுள்ளன. Gold Price Today: ஒரேநாளில் உச்சக்கட்டம்.. சவரனுக்கு ரூ.2200 உயர்வு.. உச்சக்கட்டத்தில் இன்றைய தங்கம் விலை..! 

உலக பூமி தினம் 2025 (World Earth Day 2025):

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 22 ம் தேதி பூமியின் சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டும், அது தொடர்பான விழிப்புணர்வை மக்களும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் மக்கள் தங்களின் வாழ்விடத்தை பாதுகாக்கவும், அதன் அவசியத்தை உணரவும், எதிர்கால தலைமுறைக்கு அதனை பத்திரமாக கொண்டு சேர்க்கவும் உறுதியேற்க வேண்டும். கடந்த 1969ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் ஏற்பட்ட எண்ணெய் கசிவுக்கு பின் மக்கள் ஒன்று திரண்டு ஊர்வலம் சென்று உலகத்தை பாதுகாக்க வலியுறுத்தினார். அதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் ஏப்ரல் 22 அன்று 1970ல் பூமி நாள் கொண்டாடப்பட்டு பின் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டது. இந்த நாளை கூகுள் டூடுல் (Google Doodle for Earth Day 2025) வெளியிட்டும் சிறப்பித்துள்ளது.

World Day 2025 (Photo Credit: Google.Doodle)

பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள்:

நாம் வாழும் உலகை பாதுகாக்க பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த விஷயங்களில் இனி அரசும், தனிநபரும் ஈடுபட வேண்டும். குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்த வேண்டும். இதனால் கரியமில வாயு வெளியேற்றம் குறையும். நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற படிம எரிசக்திக்கு பதில் சூரியசக்தி, காற்று சக்தி, நீர் சக்தியை பயன்படுத்தி வரும் ஆற்றலை பயன்படுத்தலாம். இதுகுறித்த விழிப்புணர்வை மாணவர்களின் கல்வியில் இருந்து கொண்டு வருவது அவர்கள் தங்களின் எதிர்காலத்தை அமைக்கும்போது சிந்திக்க உதவியாக இருக்கும். சர்வதேச அளவிலும் நாடுகள் ஒத்துழைப்பின் பேரில் இயற்கையை பாதுகாக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாடுகளை குறைப்பது போன்றவையும் பலனை ஏற்படுத்தும்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement