Honey With Lemon: அச்சச்சோ.. தேன் + எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் இப்படியானவர்களுக்கு இவ்வுளவு தீங்கா?.. அதிர்ச்சியை தரும் தகவல்.!

இளம் சூடுள்ள நீருடன் தேன் + எலுமிச்சை சாறு கலந்து குடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் ஒருவர் உடல் நன்மைக்கு எனவும், மற்றொருவர் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும் எனவும் தங்களுக்கு தெரிந்தவர் கூறிய காரணங்களை கூறிக்கொண்டு அவ்வாறு செயல்படுகின்றனர்.

Template: Honey with Lemon Juice

டிசம்பர், 8: காலை நேரத்தில் உறங்கி எழுந்ததும் இளம் சூடுள்ள நீருடன் தேன் + எலுமிச்சை சாறு (Honey With Lemon Juice) கலந்து குடிக்கும் பழக்கம் இன்றளவில் பலரிடமும் ஏற்பட்டுள்ளது. ஒருவர் உடல் நன்மைக்கு எனவும், மற்றொருவர் உடல் எடையை கட்டுக்குள் வைக்க எனவும் தங்களுக்கு தெரிந்தவர் கூறிய காரணங்களை கூறிக்கொண்டு அவ்வாறு செயல்படுகின்றனர்.

ஆயுர்வேத நிபுணர்கள் கூறுவது: எலுமிச்சை சாறில் வைட்டமின் சி, பிளாவனாயிடு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்து கிடக்கிறது. தேனில் காயத்தை குணப்படுத்த, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய சத்துக்கள் உள்ளன. ஆனால், தேனையும் - எலுமிச்சை சாறையும் சேர்ந்து அனைவரும் குடிக்க கூடாது என ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். GP Muthu: ஓவர் நைட்டில் இந்திய அளவில் பேமஸ்.. பழமொழியை மெய்ப்பித்து காண்பித்த ஜி.பி முத்து.. டக்கரான சம்பவம்.! 

உடலுக்கு ஏற்ப நிலை மாறும்: இயற்கையாக எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்த நீர் உடலில் இருக்கும் கேடான கொழுப்புகளை உருக்க உதவுகிறது. ஆனால், இக்கருத்து அனைவர்க்கும் பொதுவானது இல்லை. காலை நேரத்தில் சூடான நீரில் எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும் என்று கூறுவார்கள். இதில் உடல் எடை குறைகிறது, எந்த மாற்றமும் இல்லை என்ற இருவேறு கருத்துக்கள் உள்ளன. சிலருக்கோ பக்க விளைவுகளும் இருக்கின்றன.

யார் குடிக்கலாம்: இதனை குடிப்பதால் உடலுக்கு நன்மைகளும், சிலருக்கு பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. உடற்பயிற்சி செய்பவர்கள், உணவு விஷயத்தில் கவனமாக இருப்பவர்கள் தேன் + எலுமிச்சை சாறு கலந்த நீரை குடிக்கலாம். இது கல்லீரலில் சேரக்கூடிய நச்சினை நீக்கும். அடிவயிறு கொழுப்புகளை வெளியேறும். உடல் எடையை குறைக்க உதவும். பலவீனமான பற்கள், எலும்புகள், வாய் புண்கள், கீல்வாதம், நெஞ்சு எரிச்சல் உள்ளவர்கள் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த நீரை குடிக்க கூடாது.

குறிப்பு: தேன் கலக்கப்டும் நீர் குறைந்த சூட்டிலேயே இருக்க வேண்டும். ஏனெனில் தேனினை சூடான நீரில் சேர்க்கும் போது, அது நச்சுத்தன்மை கொண்டதாக மாறும். இந்த பணத்தை குடித்ததும் உடலுக்கு அசௌகரியம், நெஞ்சு எரிச்சல், பற்களில் கூச்சம் போன்றவை ஏற்பட்டால் இதனை தவிர்ப்பது சாலச்சிறந்தது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 8, 2022 05:15 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).