Season Fever: புளூ காய்ச்சல் என்றால் என்ன?.. அதனை தவிர்ப்பது எப்படி..! இன்றே தெரிந்துகொள்ளுங்கள்..!
பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை என அனைவரையும் பாதிக்கும் பருவமழை காலங்களான புளூ காய்ச்சல் என்பது இயற்கையாக ஏற்படக்கூடியது ஆகும்.
டிசம்பர், 10: பருவமழை காலங்களில் புளூ காய்ச்சல் (Fever) என்பது ஏற்படுகிறது. இதனால் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். வடகிழக்கு பருவமழை காலங்களான செப்டம்பர் முதல் ஜனவரி மாதம் வரையிலும் புளூ காய்ச்சல் என்பது இயற்கையாக ஏற்படக்கூடியது ஆகும்.
புளூ காய்ச்சல் ஒருவருக்கு ஏற்பட்டால், அவருக்கு 6 நாட்கள் வரையில் காய்ச்சலின் தாக்கம் இருக்கும். சிகிச்சைக்கு பின்னர் அதில் இருந்து மீண்டுவிடலாம். குழந்தைகளுக்கு உடல் உறுப்புக்கள் வளர்ச்சியை அடையும் என்பதால், அவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் மருத்துவரை நாடுவது நல்லது. ஏனெனில் அவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைந்தளவே இருக்கும்.
இக்காய்ச்சல் நமது நுரையீரலினை பாதிக்கும் என்பதால், 6 நாட்கள் வரை காய்ச்சல் நீடிக்கிறது. அதேபோல, உடல் வலி, தலைவலி, சளி, இருமல் மற்றும் தொண்டையில் கரகரப்பு போன்றவையும் ஏற்படும். காய்ச்சலின் அறிகுறிகளை பொறுத்தமட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் ஒரே மாதிரியான பாதிப்பு ஏற்படும்.
இதில், குழந்தைகளுக்கு நிமோனியாவால் உடல் நீர் இழப்பு ஏற்பட்டால், எவ்வித தாமதமும் இன்றி மருத்துவரை அணுகுவது நல்லது. புளூ காய்ச்சலோடு H1N1 இன்புளூயன்சா வைரஸ் தொற்று ஏற்பட்டால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மருத்துவருடைய ஆலோசனை இன்றி சுய சிகிச்சை என்பது எப்போதும் கூடாது. Largest Mountains: உலகளவில் மிக உயரமான மலைச்சிகரங்கள் எவை எவை?.. அசத்தல் லிஸ்ட் இதோ.. தவறாம தெரிஞ்சுக்கோங்க..!
புளூ காய்ச்சல் அதிகமாகும் சமயத்தில் ஈரத்துணியினால் உடலை முதலில் துடைக்க வேண்டும். இதனால் உடலின் வெப்பம் படிப்படியாக குறையும். பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இன்றுள்ள காலங்களில் அரசு மருத்துவமனையில் இரத்த பரிசோதனை முடிவுகள் விரைந்து வழங்கப்படுகின்றன. அவற்றின் மூலமாக உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணிப்பார்கள்.
அதேபோல், காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் குழந்தையை எக்காரணம் கொண்டு பள்ளிக்கு அனுப்புதல் கூடாது. காய்ச்சல் உடலின் நீரை வேகமாக இழக்க வைக்கும். உடலில் நீர்சத்து குறையாமல் இருக்க ஓ.ஆர்.எஸ் உப்பு சர்க்கரை கரைசல் அரசு மருத்துவமனையிலேயே கிடைக்கிறது. இதுதவிர பழச்சாறுகள் கொடுக்கலாம்.
புளூ காய்ச்சல் வராமல் தடுக்க கை, கால்களை சுத்தமாக வைக்க வேண்டும். குழந்தைகளும், பெரியவர்களும் தடுப்பூசி செலுத்த வேண்டும். காய்கறி, அசைவ சூப் போன்றவற்றை சாப்பிட வேண்டும். பொது இடங்களுக்கு செல்கையில் முகக்கவசம் அணிதல் வேண்டும். நாளொன்றுக்கு உடலுக்கு தேவையான நீரை குடிக்கவும். சூடான உணவுகளை சாப்பிடுவது, காய்ச்சி ஆரிய நீரை பருகுவது போன்றவையும் செய்யலாம்.