Birth Control Tips: தம்பதிகளே கருத்தடை பற்றி சந்தேகமா? அசத்தல் டிப்ஸ் இதோ.!

அவை குறித்த விரிவான விஷயங்களை இன்று தெரிந்துகொள்ளுங்கள்.

Couple Birth Control Tips (Photo Credit: Pixabay)

டிசம்பர் 22, சென்னை (Chennai News): திருமணம் முடிந்த தம்பதிகளில் குழந்தை பிறப்பை தள்ளிப்போட விரும்புவோர், காதல் உறவில் இருக்கும் ஜோடிகள் தங்களின் துணையுடன் தனிமையில் இருப்பது இயல்பு. இவ்வாறாக குழந்தைபிறப்பு மற்றும் கர்ப்பத்தை தவிர்க்க நினைக்கும் தம்பதிகள், கருத்தடை (Karuthadai) குறித்த தகவலையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதனால் கர்ப்பம் தவிர்க்கப்படும். குழந்தை பிறப்பு என்பது இருவரின் விருப்பத்தின் பால் இருப்பது நல்லது. திருமணத்திற்கு முந்தைய உறவுகளில், தனிமை நேரங்களில் சற்று கவனமாக இருப்பது எதிர்காலத்தில் நடக்கும் பிரச்சனைகளை தவிர்க்கவும் வழிவகை செய்யும். எந்த விதமான பக்கவிளைவும் வேண்டாம் என யோசித்தால் ஆணுறை சிறந்தது. ஆணுறையும் வேண்டாம் என சிந்தித்தால், தம்பதிகள் உச்சத்தின்போது தங்களை தாங்களே கட்டுப்படுத்தி விந்தணு வெளியேற்றத்தின்போது, அந்தரங்க உறுப்புகளை விலக்கி எடுப்பது நல்லது.

கருத்தடை மாத்திரைகள் (Birth Control Pills):

கருத்தடை மாத்திரைகள் என்பது, கட்டாயம் மருத்துவரின் ஆலோசனையில் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டியவை ஆகும். இதனை ஒருநாள் எடுக்க தவறினாலும், கருத்தடை பலனில்லாதுபோகும். ஆகையால், கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த விரும்புவோர் அதன் தொடக்கத்திலும், முடிவிலும் கட்டாயம் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும். சுயமாக மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், சிலநேரம் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மரணமும் ஏற்படும். ஹார்மோன் சுழற்சியில் மாற்றமும் உண்டாகலாம். Lays Classic Potato Chips: லேஸ் கிளாசிக் நொறுக்குதீனியால் ஒவ்வாமை? தயாரிப்புகளை திரும்பப்பெற்ற நிறுவனம்.! 

ஆணுறைகள் (Condoms):

தம்பதிகள் கூடும் நேரங்களில் கருத்தடை சாதனத்தில் அதிகம் பங்களிப்பது ஆணுறைகள். கருத்தடையை உறுதி செய்யவும், பிறப்புறுப்பு வழியாக பரவும் பால்வினை நோய்களை தடுக்கவும் ஆணுறைகள் பயன்படுகிறது. பிறப்புக்கட்டுப்பாடு முறைக்கு ஆணுறைகள் மிகைசிறந்த தேர்வு ஆகும். இது எந்த விதமான பக்கவிளைவு, உடல்நல பிரச்சனை என தம்பதிகளில் இருவருக்கும் தீங்கை ஏற்படுத்தாது. ஆனால், ஆணுறையை அணியும்போது கவனம் வேண்டும். சில நேரம் ஆணுறை கிழியும் தருணம் உண்டானால், அவை கர்ப்பத்திற்கு வழிவகை செய்யும். ஆதலால், நல்ல வகையிலான ஆணுறைகளை தேர்வு செய்ய விடும்.

பெண்களுக்கான உறை (Condoms for Woman):

இன்றளவில் சந்தைகளில் ஆண்களை போல, பெண்களுக்கும் பெண் உறை என்பது விற்பனை செய்யப்படுகிறது. இவை மறுந்தகத்திலும் கிடைக்கிறது. பெண்ணுறையை யோனிக்குள் செலுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் கர்ப்பம் தவிர்க்கப்படும். ஆணுறுகளை பொறுத்தமட்டில், அதனை உடலுக்குறைவுக்கு பின் உடனடியாக அப்புறப்படுத்தவேண்டிய சூழ்நிலை இருக்கும். பெண்ணுறைகள் ஈரப்பதம் அடைந்தாலும் சிதையாத வகையில் பாதுகாக்கும் என்பதால், ஆணின் விந்தணு மேற்படி பெண்ணுறுப்புக்குள் செல்லாது. பெண்ணின் உடல் எடையை பொறுத்து, பல்வேறு அளவில் இவை விற்பனை செய்யப்படுகிறது. மாதவிடாய்க்கு பயன்படுத்தப்படும் டேம்பான் போல பெண்ணுறையை பயன்படுத்திக்கொள்ளலாம். பெண் உறைகள் தொடர்பாக சந்தேகம் இருப்பின், மருத்துவரை அணுகுவது நல்லது. Oreo Biscuits: குட்டிஸ் விரும்பும் ஓரியோ பிஸ்கட்டில் கேன்சரை பரப்பும் கெமிக்கலா? நெட்டிசன்கள் பரபரப்பு குற்றசாட்டு.. உண்மை இதோ.! 

கருத்தடை கிரீம்கள் (Birth Control Creams):

ஆண்களின் விந்தணுவை அழிக்கும் ரசாயனங்கள் கலந்த கிரீம், ஜெல்லி, களிம்பு, மாத்திரை மறுந்தகத்தில் கிடைக்கிறது. இதனை பெண்ணின் கர்ப்பப்பை வாய்ப்பகுதியில் தடவிக்கொள்ள வேண்டும். இது ஆணின் விந்தணு, உடலுறவின்போது பெண்ணுறுப்புக்குள் செல்லாமல் தடுக்கப்படும். இதனால் கரு உருவாகுவது தடுக்கப்படும். ஆனால், இந்த முறையில் கரு உருவாகுதல் தடுக்கப்படும் என்பதற்கு உறுதியான நிலை இல்லை என்பதால், கருத்தடை கிரீம்கள் பயன்படுத்துவோர் கவனமாக இருக்க வேண்டும்.

கருத்தடை ஊசி (Birth Control Injection):

கருத்தடைக்காக புரோஜெஸ்ட்டிரான் ஹார்மோனில் தயாரிக்கப்படும் மருந்து ஊசியாக செலுத்தப்பட்டு கருத்தடை ஏற்படுத்தப்படும். இதனை 3 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்திக்கொள்ளலாம். இதனை ஆண்டுக்கணக்கில் பயன்படுத்த இயலாது. ஏனெனில், இவை ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை உண்டாக்கி, எலும்பை வீணாக்கும். Meditation Day Awareness Programme: தியான தின விழிப்புணர்வு நிகழ்ச்சி.. தேவகோட்டை கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு..!

காப்பர் டி (Copper T):

கர்ப்பப்பைக்குள் லூப் போன்ற அமைப்புடன் செயல்படுத்தப்படும் கருத்தடை சாதனம், செம்பு கலந்து உருவாக்கப்பட்டது ஆகும். ஹார்மோன் கலந்த கருத்தடை சாதனமான காப்பர் டி-ஐ, மாதவிடாய் நாட்கள் முடிந்ததும் கர்ப்பப்பைக்குள் செலுத்திவிடலாம். பிரசவம் அடைந்த பெண்ணாக இருந்தால், 2 மாதம் கழித்து உபயோகம் செய்யலாம். காப்பர் டி கருத்தடை முறை என்பது மருத்துவரின் வாயிலாக பொறுத்தப்படுவது ஆகும். ஆகையால், உரிய மருத்துவரின் ஆலோசனை இன்றி செயல்படுவது, மிகப்பெரிய பின்விளைவு / மரணத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.

குறிப்பு: மேற்கூறிய அறிகுறிகள் / தகவல்கள் பொதுவானவையே. உங்களுக்கு அதுசார்ந்த உடல்நலக்குறைவு / உடல் ஆரோக்கியம் தொடர்பாக சந்தேகம் இருப்பின், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம். அவரின் அறிவுறுத்தலின் பேரில் தேவைப்பட்டால் உடல் பரிசோதனை செய்து, மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப செயல்படலாம்.