Blood Pressure: உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் நீங்கள் அவதிப்படுறீங்களா?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
இவை இயற்கையாக நமக்கு பலன் அளிக்கக்கூடியவை.
ஜூலை 24, சென்னை (Health Tips): இன்றளவில் இருக்கும் பலருக்கும் உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருக்கிறது. சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கைகளின்படி, உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகிறது உறுதியாகியுள்ளது.
உடல் எடை அதிகரித்தல், கொழுப்பு படிதல், மனரீதியான அழுத்தம் அதிகமாக இருப்பது, கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவது, ஒரே இடத்தில் அதிகநேரம் உட்கார்ந்து இருப்பது போன்றவை இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இவை உயர் இரத்த அழுத்தத்திற்கு காரணியாக அமைகிறது.
இதனை கட்டுப்படுத்த மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டாலும், உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றம் மூலமாகவும் கட்டுப்படுத்தலாம். இவை இயற்கையாக நமக்கு பலன் அளிக்கக்கூடியவை.
நமது உடல் எடையை குறைப்பது இரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தும். உடல் பருமன் கொண்டவர்கள் உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி செய்யலாம். இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவி செய்யும். IND Vs WI: மழையால் தாமதமான IND Vs WI ஆட்டம்; ஒரு புள்ளியாவது வெஸ்ட் இண்டீஸ் பெறுமா? என எதிர்பார்ப்பு.!
வாரம் குறைந்தது 3 முறை மீன் சார்ந்த உணவுகளை சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். மது & புகைப்பழக்கம் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தவல்லது. அதனை கைவிட வேண்டும்.
உணவில் அதிகளவு காய்கறிகளை சேர்த்துக்கொள்வது, காய்கறி சாறு பருகுவது, கோதுமை சார்ந்த உணவுகள் சாப்பிடுவது நல்லது. பூண்டும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது ஆகும்.
இதனால் உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வது அவசியம். அதேபோல கீரை வகை உணவையும் சாப்பிட வேண்டும். கட்டாயம் மாத்திரை வேண்டும் பட்சத்தில், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அதனை எடுத்துக்கொள்ளலாம்.