Vatha Kulambu Recipe: கல்யாண வீட்டு வத்தக்குழம்பு செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

நறுமணமிக்க கல்யாண வீட்டு வத்தக்குழம்பு எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Vatha Kulambu (Photo Credit: YouTube)

ஜூன் 24, சென்னை (Kitchen Tips): நமது உணவு முறைகளில் பாரம்பரியமாக இருந்து வருவது குழம்பு. அந்த வகையில் எல்லோருக்கும் பிடித்தமான வத்தக்குழம்பு (Vatha Kulambu) கல்யாண வீட்டில் எப்படி சுவையாக செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.

வத்தல் குழம்பு பொடி செய்ய:

மல்லித் தூள் - 2 கைப்பிடி அளவு

சிவப்பு மிளகாய் - 6

வெந்தயம், சீரகம், மிளகு - 1 மேசைக்கரண்டி

துவரம் பருப்பு -2 மேசைக்கரண்டி

பெருங்காயம் - 1 சிட்டிகை

மேற்குறிப்பிட்ட அனைத்தையும் எண்ணையில்லாமல் வறுத்துக் கொள்ளவும். வறுத்த பின்பு இதனை மிக்ஸியில் போட்டு நன்றாக பவுடர் போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

தாளிப்பதற்கு:

கடுகு, வெந்தயம் - 1 மேசைக்கரண்டி

சிவப்பு மிளகாய் - 5

கருவேப்பிலை - 1 கொத்து. Son Stabbed To Death: குடிபோதையில் தகராறு செய்துவந்த மூத்த மகனை, தந்தை மற்றும் இளைய மகன் சேர்ந்து கொடூர கொலை..!

குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்:

மஞ்சள் தூள் - அரை மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி

வத்தல் - தேவையான அளவு (சுண்டைக்காய் வத்தல், கத்தரிக்காய் வத்தல்)

பூண்டு - 1 கையளவு

கருவேப்பிலை - 1 கொத்து

வெங்காயம் - சிறிதளவு

உப்பு, புளி - தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயில் ஒன்றரை குழி கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடேற்றி, எண்ணெய் சூடான பிறகு கடுகு, சிவப்பு மிளகாய் 2, வெந்தயம் 1 மேசைக்கரண்டி, கருவேப்பிலை, வத்தல் தேவையான அளவு சேர்த்து வதக்க வேண்டும்.

வத்தல் நன்றாக கருத்து வரும் வரை வதக்கவும். பின் அதில் வெங்காயம் சிறிதளவு, பூண்டு 1 கையளவு (தோல் நீக்கியது) சேர்த்து வதக்கி கொள்ளவும். வெங்காயம், பூண்டு பொன்னிறமான பிறகு புளிக்கரைசலை தேவையான அளவு ஊற்ற வேண்டும்.

பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து, 1 கொதி வரும் வரை வேக வைக்கவும்.

கொதித்த பிறகு அரைத்து வைத்திருக்கும் பொடியை 4 மேசைக்கரண்டி சேர்க்கவும். பின் அதில் 1 சிட்டிகை பெருங்காய தூள், நல்லெண்ணெய் 1 மேசைக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும்.

இப்போது, அடுப்பை அணைத்து விட விடவும். அவ்வளவுதான் சுவையான வத்தக்குழம்பு தயார்.