Avarakkai Poriyal Recipe: அவரைக்காய் பொரியல் சுவையாக செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
வீட்டிலேயே சுலபமான முறையில் அவரைக்காய் பொரியல் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
டிசம்பர் 17, சென்னை (Kitchen Tips): வீட்டில் அவரைக்காய் இருந்தால், அதை வைத்து பொரியல் செய்தால், அவரைக்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமானதாகும். இப்படி பொரியல் செய்து சாப்பிடும் போது, இது அனைத்து விதமான சாதத்துடன் சாப்பிட ருசியாகவும் இருக்கும். அப்படிபட்ட அவரைக்காய் பொரியல் (Avarakkai Poriyal) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைக்க தேவையானவை:
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
வறுத்த வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி
மல்லி - 1 தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வரமிளகாய் - 2. Poondu Milagai Thuvaiyal Recipe: காரசாரமான பூண்டு மிளகாய் துவையல் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
தாளிப்பதற்கு தேவையானவை:
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
அவரைக்காய் - 350 கிராம் (நறுக்கியது)
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
வரமிளகாய் - 2
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தண்ணீர், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் அவரைக்காயின் முனைப்பகுதியை நீக்கிவிட்டு, அவற்றை நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சீரகம், வரமிளகாய் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
- பின், அதில் துருவிய தேங்காய் மற்றும் வறுத்த வேர்க்கடலை சேர்த்து சிறிது நேரம் நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும்.
- பின்பு அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளித்து, பின் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
- அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கி, பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் நறுக்கி வைத்துள்ள அவரைக்காயை சேர்த்து நன்கு கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- பிறகு, அதில் அவரைக்காய் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, மிதமான தீயில் வைத்து, மூடி வைத்து அவரைக்காயை 10 நிமிடம் வேகவைக்க வேண்டும். அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறிவிட வேண்டும்.
- சுமார் 10 நிமிடம் கழித்து மூடியைத் திறக்கும் போது, அவரைக்காயில் உள்ள நீர் வற்றிவிட்டால், அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால், சுவையான அவரைக்காய் பொரியல் ரெடி.