டிசம்பர் 16, சென்னை (Kitchen Tips): பொதுவாகவே வீட்டில் நாம் சமைத்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதன்படி, அனைவரது வீட்டிலும் பூண்டு (Garlic) வைத்து சமைப்பது வழக்கம். பூண்டை தோல் உரிப்பதை விட தோலுடன் சாப்பிடுதல் மிகவும் நன்மை தரும். பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது இதயத்திற்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. எனவே, பூண்டு பேஸ்ட் செய்யும் போது பூண்டு தோலை சேர்த்து பேஸ்ட் செய்வது நல்லது. இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அந்தவகையில், பூண்டை வைத்து பூண்டு மிளகாய் துவையல் (Poondu Milagai Thuvaiyal) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். Ragi Pakoda Recipe: குழந்தைகளுக்கு பிடித்தமான சத்தான ராகி பக்கோடா செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 20
நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கல் உப்பு - முக்கால் மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒன்றரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- முதலில் பூண்டுப் பற்களை தோலுரித்து வைக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அரை மேசைக்கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- அதே பாத்திரத்தில் மீதமுள்ள நல்லெண்ணெயை ஊற்றி, சூடானதும் மிளகாய்களைப் போட்டு கருகிவிடாமல் வறுத்தெடுத்து ஆறவைக்கவும். ஆறியதும், அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக்கவும்.
- பிறகு, அத்துடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் பூண்டுப் பற்களையும் சேர்த்து, தேவையான அளவிற்கு தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து அரைத்தெடுக்கவும். அவ்வளவுதான் காரசாரமான பூண்டு மிளகாய் துவையல் ரெடி.