Avalakki Rotti Recipe: சுவையான அவலக்கி ரொட்டி செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

ஆரோக்கியமான காலை உணவாக அவலக்கி ரொட்டி எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

Avalakki Rotti (Photo Credit: YouTube)

ஜூன் 28, சென்னை (Kitchen Tips): அவலக்கி ரொட்டி அல்லது போஹா ரொட்டி தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். மெல்லிய போஹா, அரிசி மாவு, வெங்காயம், தேங்காய், சீரகம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி அவலக்கி ரொட்டி (Avalakki Rotti) தயாரிக்கப்படுகின்றது. அவலக்கி ரொட்டி ஆரோக்கியமான காலை உணவு செய்முறையாகும். அவற்றை எப்படி செய்வது என்பதை இதில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - அரை கப்

மெல்லிய போஹா அல்லது தேலு அவலாக்கி - அரை கப்

வெங்காயம் - 1

சீரகம் - அரை தேக்கரண்டி

துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

வாழை இலை. INDW Vs RSAW Test Day 1: முதல் நாள் முடிவில் இந்தியா 525 ரன்கள் குவிப்பு; ஷபாலி-மந்தனா சதம் அடித்து அசத்தல்..!

செய்முறை:

முதலில் அவலை தண்ணீரில் போட்டு நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும், அதனை கைகளால் மசித்துக்கொண்டு, அரிசி மாவு மற்றும் மசித்த அவலக்கியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதில் நறுக்கிய வெங்காயம், தேங்காய் மற்றும் சீரகம் சேர்த்து, அதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

இதனை கடினமாக பிசைந்து எடுத்து, கைகளில் எண்ணெய் தடவி, வாழை இலையில் ரொட்டி தட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ரொட்டி தட்டி வைத்துள்ளதை போடவும். வெந்த பிறகு மறுபுறம் புரட்டி போட வேண்டும். இருபுறமும் வெந்த பின்பு அதனை ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.

அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு சட்னி வைத்து, அதனை சுவைத்து சாப்பிடலாம்.