Pakarkai Sambar: கசப்பே இல்லாமல் சுவையான பாகற்காய் சாம்பார் செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே தெரிஞ்சிக்கோங்க.. சூப்பர் டிப்ஸ்.!

ஆனால், நீங்கள் பாகற்காய் சாம்பார் சாப்பிட்டது உண்டா?.

Respective: Pakarkai / Cantaloupe

டிசம்பர், 11: தென்னிந்தியாவில் பிரதானமாக விரும்பி சாப்பிடப்படும் குழம்பு வகைகளில் தவிர்க்க முடியாதது சாம்பார் (Sambar Curry). இது மாநிலத்திற்கு ஏற்றாற்போல கைப்பக்குவம் மாறும். தமிழ்நாட்டில் வைக்கப்படும் சாம்பாரின் சுவையும், கேரளா & ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் வைக்கப்படும் சாம்பாரின் சுவையும் வேறுவேறாக இருக்கும்.

பொதுவாக சாம்பார் என்றாலே துவரம்பருப்பு, கத்தரிக்காய், கேரட், பீன்ஸ், முருங்கை, சௌ சௌ, முள்ளங்கி போன்று பல காய்கறிகளை சேர்த்தும் தனித்தனியேவும் சாம்பாராக வைக்கலாம். ஆனால், நீங்கள் பாகற்காய் சாம்பார் சாப்பிட்டது உண்டா?.

பெரும்பாலும் பாகற்காய் காரக்குழம்பு வகையில் வைக்கப்படுகிறது. ஏனெனில் அதனை முறையாக சமைக்காவிடில் பாகற்காயின் கசப்பு அப்படியே தெரியும். இன்று கசப்பு சுவையே தெரியாமல் பாகற்காய் சாம்பார் (Cantaloupe Sambar) செய்வது எப்படி என காணலாம். Avoid Heart Attack: இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க கட்டாயம் நாம் செய்யவேண்டிய விஷயங்கள் என்னென்ன?..! 

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - அரை கிலோ,

துவரம்பருப்பு - 2 கப்,

வெங்காயம் & தக்காளி - 2 ஜோடி,

தேங்காய் துருவல் - தேவையான அளவு,

புளி - சிறிதளவு,

கறிவேப்பில்லை & கொத்தமல்லி - சிறிதளவு,

மிளகாய் வற்றல் - சிறிதளவு.

Sambar

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட புளியை சூடான நீரில் ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பாகற்காயின் விதைகளை நீக்கிவிட்டு உங்களுக்கு பிடித்த வடிவத்தில் நறுக்கி தயிரில் பிசைந்து அரைமணிநேரம் ஊற வைக்க வேண்டும். தயிரில் பாகற்காயை வைப்பது கசப்பை நீக்குவதற்கு உதவி செய்யும்.

அரைமணிநேரம் கடந்தும் பாகற்காயை நீரில் அலசி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். எடுத்துக்கொள்ளப்பட்ட வெங்காயம், தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பை சிறிதளவு மஞ்சள் தூள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும்.

பின்னர், அடுப்பை பற்றவைத்து பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, பாகற்காய் போன்றவற்றை ஒன்றன் பின்னர் ஒன்றாக நன்கு வதக்க வேண்டும். இவை வதங்கியதும் மஞ்சள் தூள், குழம்பு மசாலாக்களை சேர்த்து கிளற வேண்டும்.

அதன்பின் அரைத்து வைத்த தேங்காய் துருவலை சேர்த்து கிளறி, வெந்துகொண்டு இருக்கும் துவரம் பருப்பு முக்கால் வேக்காடு வந்ததும் காய்கறிகளுடன் சேர்த்து கொதிக்காவிட்டால் சுவையான பாகற்காய் சாம்பார் தயார். காய்கறிகள் நன்கு வேகவைத்த பின்னர் கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் மனமும், சுவையும் சுண்டி இழுக்கும். விருப்பம் உள்ளவர்கள் பெருங்காய பொடி சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 05:26 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif