Coconut Biscuit Recipe: குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் பிஸ்கட் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
குழந்தைகள் விரும்பி உண்ணும் தேங்காய் பிஸ்கட் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
ஜூலை 02, சென்னை (Kitchen Tips): தேங்காய் பிஸ்கட் (Thengai Biscuit) பெரும்பாலும் பேக்கரி கடைகளில் கிடைக்கும். அதனை டீ, காப்பி ஆகியவற்றோடு சேர்த்து சாப்பிட்டால் சூப்பரான சுவையில் அற்புதமாக இருக்கும். அந்த வகையில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான தேங்காய் பிஸ்கட் (Coconut Biscuit) வீட்டில் எப்படி செய்து கொடுப்பது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - ஒன்றரை கப்
உலர்ந்த தேங்காய் பொடி - அரை கப், 3 மேசைக்கரண்டி
சர்க்கரை - முக்கால் கப்
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
பால் - 2 தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி. Minor Boy Died After A Metal Piece Pierced His Stomach: இரும்புத் துண்டு வயிற்றை துளைத்து 5 வயது சிறுவன் உயிரிழப்பு; பட்டாசு வெடித்து கொண்டாடியபோது நேர்ந்த பரிதாபம்..!
செய்முறை:
முதலில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்து வைத்துக் கொள்ளவும். பின்னர், உலர்ந்த தேங்காய் பொடியை எடுத்து தயாராக வைக்க வேண்டும்.
ஒரு பவுலில் சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து நன்கு பீட் செய்யவும். அத்துடன் சலித்து வைத்துள்ள மைதா மாவை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். பின்னர் கையால் நன்கு பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் பால் சேர்த்து பிசைந்து கொள்ளலாம். இதில் பால் சேர்க்கவில்லை.
அடுத்து, ஒரு கரண்டி எடுத்து அதில் கலந்து வைத்துள்ள பிஸ்கட் கலவையை ஒரே சமமாக எடுத்து, உருட்டி, நடுக்கையில் வைத்து அழுத்தி ஒரு பட்டர் பேப்பர் மேல் வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின் தேங்காய் பொடியில் பிரட்டி 5 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் ஏர் பிரையரை 180 டிகிரி செல்சியஸ் வைத்து, 8 நிமிடங்கள் பிரீ ஹீட் செய்து 12 நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் மிகவும் சுவையான, கிரிஸ்பியான தேங்காய் பிஸ்கட் ரெடி.