ஜூலை 02, போபால் (Madhya Pradesh News): மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது, போபால் மாவட்டத்தில் உள்ள கோஹல்பூர் பகுதியில் பட்டாசு வெடிக்கும்போது 5 வயது சிறுவனின் வயிற்றை இரும்புத் துண்டு (Metal Piece) துளைத்தது. Police Officer Enjoying With Drunken Man: குடிபோதையில் நடனமாடியதை விசில் அடித்து கொண்டாடிய காவல் அதிகாரி; வீடியோ வைரல்..!
கடந்த ஜூன் 30-ஆம் தேதி அன்று, டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக கோஹல்பூர் பகுதியில் பலர் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். அதில், ஒரு குழு பட்டாசு வெடிக்கும்போது இரும்பு பொருட்களை பயன்படுத்தியது. பட்டாசுகள் இரும்புத் தொட்டிகளில் விழுந்து, பட்டாசு வெடித்ததில் இரும்புத் துண்டுகள் பறந்து சிதறின. அப்போது, தெருவில் நின்றிருந்த தீபக் என்ற சிறுவனின் வயிற்றில் இரும்புத் துண்டு புகுந்தது. இரும்புத் துண்டு அவரது வயிற்றில் ஊடுருவி படுகாயம் அடைந்து, ரத்தக் கசிவு ஏற்பட்டது.
உடனடியாக சிறுவனை மீட்ட குடும்பத்தினர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.