Kerala Kadala Curry Recipe: கேரளா ஸ்டைல் கடலைக்கறி செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
அனைவருக்கும் பிடித்தமான கேரளா கடலைக்கறி எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
ஆகஸ்ட் 14, சென்னை (Kitchen Tips): கேரளாவில் கருப்புக் கடலைக் கறியை புட்டு மற்றும் பிற சிற்றுண்டி உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவர். இந்த கருப்பு கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது கர்ப்பிணி பெண்களுக்கு அதிக பயன்களை அளிக்கும். அப்படிப்பட்ட கேரளா ஸ்டைல் கடலைக்கறியை (Kerala Kadala Curry) சுவையாக எப்படி செய்து சாப்பிடுவது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கருப்பு கொண்டைக்கடலை - 250 கிராம்
தக்காளி - 1
வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 8
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
கடுகு, சீரகம் - தலா அரை தேக்கரண்டி
தனியா - 3 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி. Vegetable Pancakes Recipe: வீட்டில் எல்லோரும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. வெஜிடபிள் பான் கேக் செய்வது எப்படி? விபரம் உள்ளே..!
செய்முறை:
முதலில் கொண்டைக்கடலை தண்ணீரில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி சுமார் 8 மணிநேரம் ஊற வைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர், தேங்காய், காய்ந்த மிளகாய் மற்றும் தனியாவை வெறும் கடாயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கி விட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து பச்சை வாசம் போக வரை கொதிக்க விடவும்.
பின், அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விட வேண்டும். இந்த கலவையில் வேகவைத்து எடுத்து வைத்துள்ள கடலை சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும். கலவை நன்கு கெட்டியாகி வந்ததும் அடுப்பை அணைக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான கேரளா கடலைக்கறி ரெடி.