ஆகஸ்ட் 14, சென்னை (Kitchen Tips): பெரும்பாலான வீடுகளில் கோதுமை மாவை கொண்டு சப்பாத்தி, தோசை என செய்வது தான் வழக்கம். ஆனால் இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபியில் கோதுமை மாவு வைத்து சுவையான வெஜிடபிள் பான் கேக் செய்வது எப்படி என்று தான். இந்த வெஜிடபிள் பான் கேக்கில் காய்கறிகள் சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவாக இருக்கும். எனவே சுவையான அதே சமயத்தில் ஆரோக்கியம் நிறைந்த வெஜிடபிள் பான் கேக் (Vegetable Pancakes Recipe) எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1/2 கப்
பொட்டுகடலை - 1/2 கப்
வெங்காயம் - 1 நறுக்கியது
பூண்டு - 5 பற்கள் நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
முட்டை கோஸ் - 1 கிண்ணம் துருவியது
கேரட் - 2 துருவியது
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
எண்ணெய் - தேவையான அளவு Perumal Kovil Puliyodharai Recipe: பெருமாள் கோவில் புளியோதரை சுவையாக வீட்டில் தயார் செய்வது எப்படி..?
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய், துருவிய முட்டை கோஸ், கேரட் சேர்த்து வதக்கவும். பின்பு உப்பு, மிளகு தூள், சீரக தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி கடாயை மூடி மிதமான தீயில் 5 நிமிடம் வேகவிடவும். பின்பு மற்றோரு பாத்திரத்திற்கு மாற்றி ஆறவிட்டு அதில் கொத்தமல்லி இலை, கோதுமை மாவு, பொட்டு கடலையை மாவாக அரைத்து சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி அதில் தயார் செய்த மாவை சிறிதளவு ஊற்றி வட்டமாக அழுத்தி விடவும். பின்பு இரு பக்கமும் 3 நிமிடம் பொன்னிறமாகும் வரை வேகவிடவும். அவ்வளவு தான், வெஜிடபிள் பேன் கேக் தயார்!