Mutton Biryani Recipe: முனியாண்டி விலாஸ் மட்டன் பிரியாணி செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
பாரம்பரியமான முனியாண்டி விலாஸ் மட்டன் பிரியாணி எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
டிசம்பர் 03, சென்னை (Kitchen Tips): பிரியாணியில் பல வகைகள் உண்டு. அதிலும், சிக்கன் பிரியாணி, முட்டை பிரியாணி, மட்டன் பிரியாணி என நிறைய வகைகள் உள்ளன. இதில், மட்டன் வைத்து செய்யப்படும் பிரியாணி முறைகளுக்கு ஏற்ப தனி ருசி உண்டு. அந்தவகையில், தமிழ்நாட்டில் மதுரை முனியாண்டி விலாஸ் மட்டன் பிரியாணியை (Muniyandi Vilas Mutton Biryani) விறகு அடுப்பில் செய்வதே மிகச் சிறந்தது. இதனை, திறந்த பாத்திரத்தில் செய்து தம் போட்டு இறக்கி வைத்து, குறிப்பாக சீரக சம்பா அரிசியில் மட்டுமே செய்யவேண்டும். அரிசியை விட மட்டன் கூடுதலாக இருக்க வேண்டும். இந்த முனியாண்டி விலாஸ் மட்டன் பிரியாணி (Mutton Biryani) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். Mushroom Pakoda Recipe: காளான் வைத்து மொறுமொறுப்பான பக்கோடா செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
மட்டன் - ஒன்றரை கிலோ
மட்டன் கொழுப்பு - 200 கிராம்
சீரக சம்பா அரிசி - ஒரு கிலோ
வெங்காயம் - அரை கிலோ
தக்காளி - 350 கிராம்
பச்சை மிளகாய் - 10
புளிக்காத கெட்டித் தயிர் - 200 கிராம்
பூண்டு - 150 கிராம்
இஞ்சி - 100 கிராம்
டால்டா, நெய் - தலா 100 கிராம்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
தனி மிளகாய் தூள் - இரண்டு கரண்டி
கொத்தமல்லி, புதினா - தலா 1 கட்டு
கடலை எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையானவை:
சோம்பு - 1 மேசைக்கரண்டி
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 8
லவங்கம் - 7
பிரிஞ்சி இலை - 2
மராத்தி மொக்கு - 1
அன்னாசி பூ - 1. Mutton Biryani: சுவையான மட்டன் பிரியாணி, இந்த ஸ்டைலில் செய்து அசத்துங்க.. சமையல் டிப்ஸ் இதோ.!
செய்முறை:
- முதலில் அரிசியை நன்கு கழுவி 35 நிமிடங்கள் ஊற வைக்கவும். இஞ்சி பூண்டு, பச்சை மிளகாயை விழுதாக அரைக்காமல் அம்மியில் இடித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- பிறகு, அடி கனமான பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து டால்டா, நெய், மற்றும் எண்ணெய் சேர்த்து மசாலா பொருட்களை போட்டு வாசனை வரும் வரை வதக்க வேண்டும். பின்பு, அதில் இடித்து வைத்த இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பின்பு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
- அதன்பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, பாதியளவு புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். பின்னர், இதில் கழுவி வைத்த மட்டன், கொழுப்பு சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்கவும். பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள் தலா 1 தேக்கரண்டி மற்றும் தயிர் சேர்த்து 10 நிமிடம் வதக்கவும். உப்பு சரிபார்த்துக் கொள்ளவும்.
- இதில், ஒரு பெரிய டம்ளர் தண்ணீர் விட்டு மூடி போட்டு 40 நிமிடங்கள் வேகவிடவும். அவ்வப்போது, மூடியை திறந்து தேவைக்கு நீர் சேர்க்கவும். மட்டன் நன்கு வெந்ததும், ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் நீர் என்ற கணக்கில், இதில் தேவையான நீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
- தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் அரிசியை சேர்த்து மீதம் உள்ள உப்பு போட்டு அரிசியை அதிக வெப்பத்தில் 5 நிமிடம் வைத்து கொதிக்கவிட்டு, பின்பு மிதமான சூட்டில் ஐந்து நிமிடம் வேக விடவும். இப்போது உப்பு, காரம் சரிபார்க்கவும் ஏதாவது குறைந்தால் சரி செய்யவும். இதில் மீதம் உள்ள புதினா, கொத்தமல்லி மேலே தூவிவிடவும்.
- பின்னர், நெருப்பை குறைத்து வைத்துவிட்டு மேலே ஒரு மூடி போட்டு அதன் மேல் ஏதேனும் வெயிட் வைக்கவும். இதேபோல் 15 நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். இப்போது 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு பின்னர், தம்மை திறந்து பிரியாணியின் மீது பரவலாக நெய் ஊற்றி ஒரு கரண்டியால் பக்கவாட்டில் இருந்து கலக்கி விடவும்.
- அவ்வளவுதான் ருசியான காரசாரமான பாரம்பரிய முனியாண்டி விலாஸ் பிரியாணி ரெடி. இதனை தயிர் பச்சடி, க்ரேவியுடன் பரிமாறலாம்.