Mutton Biryani (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 29, சென்னை (Cooking Tips): வார இறுதி விடுமுறை நாட்கள் என்றாலே, அசைவ வகை உணவுகளுக்கு வீடுகளில் பஞ்சம் இருக்காது. ஆடு, கோழி, மீன், நண்டு என தங்களுக்கு பிடித்த உணவுகளை பலரும் செய்து சாப்பிட்டு, மதிய வேளையில் அசத்தல் உறக்கத்தை கடைபிடிப்பார்கள். இது அவர்களின் வார இறுதியை கொண்டாடவும், எதிர்வரும் வாரத்திற்கான உடல் ஊட்டத்தை சேகரிக்கவும் உதவி செய்யும். அந்த வகையில், இன்று சுவையான மட்டன் பிரியாணி (Mutton Biryani Recipe) செய்வது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள். Temple Style Puliyodharai: கோவில் ஸ்டைலில் சுவையான புளியோதரை; வீட்டிலேயே செய்து பெருமாளை வழிபடுங்கள் ஆன்மீக நண்பர்களே.! 

மட்டன் பிரியாணி செய்யத் தேவையான பொருட்கள்:

சீராக சம்பா அரிசி - 1 கிலோ,

தக்காளி - 3,

இஞ்சி - 80 கிராம்,

பச்சை மிளகாய் - 6,

பூண்டு - 80 கிராம்,

புதினா இலை - கைப்பிடியளவு,

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 6,

மல்லித்தழை - கைப்பிடியளவு,

தேங்காய் பால் - 1 கப்,

ஆட்டுக்கறி - 1 கிலோ,

நாட்டு வெங்காயம் - 150 கிராம்,

பெரிய வெங்காயம் - 150 கிராம்,

புளித்த தயிர் - 100 கிராம்,

உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - 200 மில்லி,

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட அரிசியை கழுவி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். தக்காளி, வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைத்துக்கொள்ளவும்.

பின் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், புதினா, மல்லி ஆகியவற்றை தனித்தனியே நீர்விட்டு மிக்சியில் மசாலா பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கிராம்பு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். Lemon Cake Recipe: வீட்டிலேயே சுவையாக லெமன் கேக் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

மட்டனை சுத்தம் செய்து குக்கரில் சேர்த்து, நீர் ஊற்றி 3 - 5 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். மட்டன் வேகும் பதம் என்பது நீங்கள் வாங்கும் இறைச்சியின் தன்மைக்கேற்ற மாறும். இளம் ஆட்டுக்கறி விரைவில் வெந்துவிடும், வயதான ஆடு இறைச்சியை தவறுதலாக வாங்கிவந்தால் 6 முதல் 8 விசில் கூட தேவைப்படலாம் என்பதால், இறைச்சியில் கவனம் முக்கியம்.

பின் கனமான வான்வெளியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் முதலில் பொடித்து வைத்த ஏலக்காய், கிராம்பு, பட்டையை சேர்க்க வேண்டும். பொடியே நறுக்கிய வெங்காயம் சேர்த்து, அதனை பொன்னிறமாகும் வரை கிளற வேண்டும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து கிளற வேண்டும்.

மசாலாவை ஒவ்வொன்றாக சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரையில் காத்திருக்க வேண்டும். பின் தேங்காய் பால், மட்டன், தயிர் ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும். மிதமான தீயில் அடுப்பு இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பும் சேர்த்துக்கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் இரண்டு கப் நீரில் சீரக சம்பா அரிசியை கொதிக்கவிட்டு, 75% வெந்ததும் அரிசியை மசல்லில் சேர்த்து மிதமான தீயில் வேகவைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து, அடிபிடிக்காமல் கிளறி தம் வைத்து இறக்கினால் சுவையான மட்டன் பிரியாணி தயார்.