Mushroom Pakoda Recipe: காளான் வைத்து மொறுமொறுப்பான பக்கோடா செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
மொறுமொறுப்பான காளான் பக்கோடா எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
டிசம்பர் 03, சென்னை (Kitchen Tips): குளிர் மற்றும் மழைக் காலத்தில் மாலை வேளை என்றாலே டீ, காபி குடிக்கும்போது மொறுமொறுவென்று சாப்பிட தோணும். அந்த நேரத்தில் சில வித்தியாசமான பக்கோடாக்களை செய்து சாப்பிடலாம். அசைவ பிரியர்களுக்கு சிக்கன், மட்டன் பிடிப்பதை போல சைவ பிரியர்களுக்கு காளான் ரொம்ப பிடிக்கும். அசைவத்தில் இருக்கும் அதே அளவு ஆரோக்கிய நன்மைகள் காளானிலும் உள்ளது. காளான் வைத்து சுவையான மொறு மொறு காளான் பக்கோடா (Mushroom Pakoda) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். Meal Maker White Kurma Recipe: மீல் மேக்கர் வைத்து சுவையாக வெள்ளை குருமா செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
காளான் - 200 கிராம்
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - கால் கப்
சோள மாவு - கால் கப்
மிளகாய் தூள் - 2 கரண்டி
பச்சை மிளகாய் விழுது - 1 கரண்டி
இஞ்சி_பூண்டு விழுது - அரை கரண்டி
வெங்காயம் - 1
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் காளான், வெங்காயம் ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து, பின் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அடுத்து, கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், இதில் நறுக்கிய காளான் சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- இதனிடையே அரிசி மாவு, கடலை மாவு, சோள மாவு ஆகியவற்றை ஒரு சல்லடை கொண்டு சலித்து தூசி நீக்கி, பின் ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் விழுது, இஞ்சி - பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.
- இறுதியாக, இதனுடன் வறுத்த காளான் மற்றும் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து பதமாக பிசைந்துக் கொள்ள பக்கோடாவிற்கான மாவு தயார். பின், கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- எண்ணெய் நன்கு கொதிக்கும் நிலையில், இதில் பக்கோடா மாவினை நன்கு உதிர்த்து சேர்த்து, பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான காளான் பக்கோடா ரெடி.