Paneer Podimas Recipe: சுவையாக பனீர் பொடிமாஸ் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
சுவையான பனீர் பொடிமாஸ் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
டிசம்பர் 28, சென்னை (Kitchen Tips): பனீர் மிகவும் சத்தான ஒரு உணவுப்பொருள். பனீர் வைத்து செய்யப்படும் அனைத்து ரெசிபிக்களும் மிக சுவையாக இருக்கும். இதில் புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. பனீர் வைத்து பனீர் டிக்கா, பனீர் பட்டர் மசாலா, பனீர் 65, சில்லி பனீர், பனீர் கிரேவி, பனீர் சமோசா என்று பல விதமான ரெசிபிக்களை செய்யலாம். அந்தவகையில், சற்று வித்தியாசமான பனீர் பொடிமாஸ் (Paneer Podimas) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். Kalyana Veetu Sambar Recipe: சுவையாக கல்யாண வீட்டு சாம்பார் வைப்பது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
பனீர் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - ஒரு கப்
பூண்டு - 8 பல்
இஞ்சி - ஒரு துண்டு
மிளகுதூள் - அரை தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையானஅளவு
செய்முறை:
- முதலில் பனீரை துருவிக்கொள்ள வேண்டும். அடுத்து வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி, துருவி வைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை தாளிக்கவும். அதனுடன் கீறிய பச்சை மிளகாய், சிறிதாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
- பின்னர் அதில் இஞ்சி துருவல், நசுக்கிய வெள்ளை பூண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். அடுத்து மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். இறுதியாக பனீருடன் மிளகுத்தூள் சேர்த்து கிளறி, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான பனீர் பொடிமாஸ் ரெடி.