டிசம்பர் 26, சென்னை (Kitchen Tips): பெரும்பாலும் நம் வீடுகளில் ஒரு நாளையில் எத்தனை முறை கொடுத்தாலும் சாப்பிட கூடிய ஒரு உணவாக சாம்பார் இருக்கும். இது தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் பல வகைகளில் சாம்பார் செய்யப்படுகிறது. இந்த சாம்பாரில் சேர்க்கப்படும் பருப்பு வகைகளில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. இது ஒரு கூட்டுக்கலவை என்பதால் ஊட்டச்சத்துகளின் ஒரு மொத்த கலவையாகவும், ஆரோக்கியமாகவும், சுவையாகவும் இருக்கிறது. கல்யாண வீட்டு சாம்பார் தயாரிக்க அதில் சில பொருட்களை சேர்க்க வேண்டும். அப்படிபட்ட கல்யாண வீட்டு சாம்பாரை (Kalyana Veetu Sambar) வீட்டில் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். Sweet Banana Balls: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ரெசிபி.. வாழைப்பழ ஸ்வீட் உருண்டை செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 10
துவரம் பருப்பு - முக்கால் கப்
தக்காளி - 1
பாசிப்பருப்பு - கால் கப்
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 1 பல்
கடலை மாவு - 3 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை - 1 மேசைக்கரண்டி
கரம் மசாலா பொடி - அரை தேக்கரண்டி
மசாலா பொடி - 1 கரண்டி
மஞ்சள் பொடி - 1 கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் பருப்பை ஊற வைக்கவும். இதனிடையே சின்ன வெங்காயம், பூண்டுகளை தோல் நீக்கி வெட்டிக் கொள்ளவும். பிறகு தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போன்றவற்றை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலை மாவினை அரை டம்ளர் தண்ணீரில் நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின்னர் அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- அடுத்து, அரை நிமிடம் கழித்து அதில் பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வெந்ததும், அதில் பூண்டினைச் சேர்த்து வதக்கி, ஒரு நிமிடம் கழித்து நறுக்கிய தக்காளியைச் சேர்த்து மசிய வதக்கவும். பின்னர் அதனுடன் மசாலாப் பொடி, கரம் மசாலாப் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறவும். அதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
- மசாலாப் பொடிகளின் பச்சை வாசனை போனதும், கரைத்து வைத்துள்ள கடலை மாவினை சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டி சேராதவாறு கிளறவும். அதனுடன் 2 டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் அடுப்பினை மிதமான சூட்டில் வைத்து மூடி போட்டு 3 முதல் 4 நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும்.
- மூடியைத் திறந்துப் பார்க்கும்போது தேவையான பதம் வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லி இலையைத் தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கல்யாண வீட்டு சாம்பார் ரெடி.