Paruppu Payasam Recipe: சுவையான பருப்பு பாயசம் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

தித்திக்கும் சுவையில் சத்து நிறைந்த பருப்பு பாயசம் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Paruppu Payasam (Photo Credit: YouTube)

மே 31, சென்னை (Kitchen Tips): நம் வீடுகளில் பண்டிகை நாட்களில் செய்யப்படும் இனிப்பு வகைகளில் ஒன்றுதான் பாயசம். அந்தவகையில், பருப்பு பாயசம் (Paruppu Payasam) எப்படி செய்வது என்பதை இதில் பார்ப்போம். இதில் வெல்லம், தேங்காய் பால் சேர்த்திருப்பதால் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி அளிக்கும். மேலும், வெல்லத்தில் இரும்புச் சத்து நிறைந்து காணப்படுகிறது. இந்த பருப்பு பாயசம் சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

பாசி பருப்பு, வெல்லம் - தலா கால் கப்

முந்திரி, திராட்சை - 2 மேசைக்கரண்டி

ஏலக்காய் - கால் தேக்கரண்டி

தேங்காய்ப் பால் - கால் கப்

துருவிய தேங்காய் - 1 மேசைக்கரண்டி

நெய் - தேவையானஅளவு. Redmi Note 13R: ரெட்மி நோட் 13R ஸ்மார்ட் போன் சீனாவில் அறிமுகம்..! விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!

செய்முறை:

முதலில் வேகவைத்த பாசி பருப்பை (Dal) பாத்திரத்தில் சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதில் வெல்லம் சேர்த்து நன்றாக கரையும் வரை கிளறி விடவும்.

வெல்லம் கரைந்து வந்ததும், அதில் தேங்காய்ப் பால் சேர்த்து மிதமான தீயில் வைக்க வேண்டும்.

பிறகு, ஏலக்காயை தட்டி சேர்த்துக் கொள்ளவும். பாயசம் கொதிக்க துவங்கியதும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து உருகியதும், அதில் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பின், அதை பாயசத்தில் சேர்த்துக் கொண்டு, அதனுடன் சிறிதளவு துருவிய தேங்காயை நெய்யில் வதக்கி சேர்த்துக் கொண்டால், சுவை கூடும். அவ்வளவுதான், சுவையான பருப்பு பாயசம் ரெடி.