Redmi Note 13R (Photo Credit: @MiuiBlog X)

மே 31, சென்னை (Technology News): ரெட்மி நிறுவனம் தனது புதிய Note 13 சீரிஸில் ரெட்மி நோட் 13R ஸ்மார்ட் போனை (Redmi Note 13R Smart Phone) சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது, Redmi Note 12R மாடலை பின்தொடர்ந்து, பேட்டரி திறன், டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதம் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஆகியவற்றில் மேம்பட்டதாக வெளியாகி உள்ளது. இதன் முழு விவரம் மற்றும் விலை பற்றிய குறிப்புகளை இதில் பார்ப்போம்.

விலை: இந்த ஸ்மார்ட் போன், 6GB + 128GB ஸ்டோரேஜ் உடன் RMB 1,399 (சுமார் ரூ. 16,400), 8GB + 128GB மாறுபாட்டிற்கு RMB 1,599 (சுமார் ரூ. 18,500), 12GB + 256GB மாடலுக்கு RMB 1,999 (சுமார் ரூ. 23,400) மற்றும் 12GB + 512GB ஸ்டோரேஜ் வசதியுள்ள RMB 2,199 (சுமார் ரூ. 25,800) ஆகிய விலையில் விற்கப்படும். Female Airline Employee Arrested: மலக்குடலில் மறைத்து வைத்து சுமார் 1 கிலோ தங்கம் கடத்தல்; விமான நிறுவன பெண் பணியாளர் கைது..!

சிறப்பம்சங்கள்: இதில், 6.79-இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு வீதம், 2460 x 1080 பிக்சல்கள் அடர்த்தி, 550nit பிரகாசம், 240Hz டச் மாதிரி வீதம், DC டிம்மிங், TUV ஆகிய அம்சங்களுடன் வந்துள்ளது. மேலும், Qualcomm Snapdragon 4 Gen 2 SoC மூலம் இயக்கப்படுகின்றது. கிராபிக்ஸிற்காக Adreno GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட, பல மாடல்களில் வருகிறது. 6GB+128GB, 8GB+128G, 8GB+256GB, 12GB+256GB, மற்றும் 12GB+512GB.

கேமராக்களைப் பொறுத்தவரை, 50MP முதன்மை கேமரா மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவற்றுடன், செல்பிகள் மற்றும் வீடியோவிற்கு முன்புறத்தில் 8MP ஷூட்டர் உள்ளது. மேலும், 5,030mAh பேட்டரி திறன் கொண்ட 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன் வந்துள்ளது.

இதில் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP53 மதிப்பீடு மற்றும் பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் கைரேகை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு பதிப்பு விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், HyperOS ஸ்கின்னுடன் வெளியாகியுள்ளது.