Ellu Kuzhambu Recipe: சத்தான எள்ளு குழம்பு செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

பல்வேறு சத்துகள் நிறைந்த எள்ளு பயன்படுத்தி சுவையான எள்ளு குழம்பு எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Ellu kuzhambu (Photo Credit: YouTube)

ஜூலை 29, சென்னை (Kitchen Tips): ஊட்டச்சத்து மிகுந்த எள்ளு (Sesame) பயன்படுத்தி சுவையான எள்ளு குழம்பு செய்து அதனை சாதத்துடன் மட்டுமின்றி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இந்த குழம்புடன் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். எள்ளு விதையில் ஏராளமான சத்துக்கள் உள்ளதால், அதை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, இதய நோய், சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அந்த வகையில் சுவையான எள்ளு குழம்பு (Ellu Kuzhambu) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

எள்ளு - 2 மேசைக்கரண்டி

வர மிளகாய் - 8

தனியா - 1 மேசைக்கரண்டி

பச்சரிசி, துவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

சீரகம், வெந்தயம் - அரை மேசைக்கரண்டி

சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு

தக்காளி - 1

கடுகு, உளுந்து - அரை தேக்கரண்டி

கருவேப்பிலை - 2 கொத்து

நல்லெண்ணெய் - 3 குழி கரண்டி

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

பூண்டு - 5 பல்

ஒரு சிறிய லெமன் அளவு புளி கரைத்து கொள்ளவும். Chicken 65 Gravy Curry: சுவையான சிக்கன் 65 கிரேவி செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே தெரிஞ்சிக்கோங்க..!

செய்முறை:

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், தனியா, அரிசி, துவரம்பருப்பு, சீரகம், வெந்தயம் எல்லாவற்றையும் போட்டு நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

அதனுடன் எள்ளையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பின் இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் உளுந்து ஆகியவற்றை நன்கு வதக்கி கொள்ளவும். பின் வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும், அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பின் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

கொதித்தபிறகு அதனுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்கு கிளறிவிடவும். தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான எள்ளு குழம்பு தயார்.