Chicken 65 Gravy Curry (Photo Credit: YouTube)

ஜூலை 28, சென்னை (Cooking Tips): வாரஇறுதி விடுமுறை நாட்கள் என்று கூறினாலே பெரும்பாலான வீடுகளில் இறைச்சி, மீன் போன்ற அசைவ வகை உணவுகள் தாராளமாக இருக்கும். வீட்டில் இருக்கும் அனைவரும் ஒவ்வொரு பொறுப்புகளை எடுத்துக்கொண்டு பணியாற்றி, பின் உணவை தயார் செய்து சுவையுடன் அன்பையும் ரசித்து சாப்பிட்டு மகிழுவார்கள். இன்று நாம் சுவையான சிக்கன் 65 கிரேவி செய்வது எப்படி என காணலாம். பொதுவாக சிக்கனில் கிரேவி செய்வது வாடிக்கையானது, சிக்கன் 65ல் (Chicken 65 Curry) கிரேவி செய்வது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள். Pattarai karuvattu Oorugai Recipe: பழைய கஞ்சிக்கு ஏற்ற சைடிஷ்.. ருசியான பட்டறை கருவாட்டு ஊறுகாய் செய்வது எப்படி..?

தேவையான பொருட்கள்:

சிக்கன் ஊறவைக்க..

சிக்கன் - 1/2 கிலோ,

தயிர் - 1/4 கப்,

இஞ்சி பூண்டு விழுது - 1 கரண்டி,

மஞ்சள் தூள் - 1/4 கரண்டி,

உப்பு - 1/2 கரண்டி,

எலுமிச்சை சாறு - 1/2 பழம் அளவு,

முட்டை - 1,

65 மசாலா - 1 பாக்கெட்,

அரைக்க..

தக்காளி - 3 அல்லது 4,

மிளகாய் வற்றல் அல்லது மிளகாய் - 2 முதல் 3,

முந்திரி - 10

தாளிக்க..

எண்ணெய் - 2 கரண்டி,

பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ் சீரகம், அன்னாசிப்பூ - சிறிதளவு

கறிவேப்பில்லை - சிறிதளவு

குழம்புக்கு..

பெரிய வெங்காயம் - 2,

மிளகாய்தூள் - 1 கரண்டி,

மல்லித்தூள் - 1 1/2 கரண்டி,

சீரகத்தூள் - 1 கரண்டி,

கரம் மசாலா - 1 கரண்டி,

கொத்தமல்லி - சிறிதளவு,

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

  • முதலில் எடுத்துக்கொண்ட சிக்கனை நன்கு சுத்தம் செய்து, மேற்கூறிய பொருட்கள் சேர்த்து சிக்கனை நன்கு பிசைந்து ஊறவைக்க வேண்டும். உப்பு உங்களின் தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம். எடுத்துக்கொண்ட சிக்கன் 30 நிமிடம் முதல் 1 மணிநேரம் வரை நன்கு ஊறியதும், அதனை எண்ணெயில் சேர்த்து பொறித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். Hotel Style Poori Kizhangu Recipe: ஹோட்டல் ஸ்டைலில் பூரி கிழங்கு மசாலா செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

  • பின் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்து எடுத்துவைத்துக்கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பெருஞ் சீரகம், ஏலக்காய், அன்னாசிப்பூ ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் தாளிக்க வேண்டும். பின் இதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கிளற வேண்டும்.
  • பச்சை வாசனை போனதும் அரைத்து வைத்துள்ள தக்காளி, முந்திரி விழுதை சேர்த்து வதக்கவும். பின் மிளகாய்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சிக்கன் குழம்பு மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிவிட வேண்டும். மசாலா மனம் சற்று மாறும்போது, அதனுடன் நாம் முன்னதாக பொறித்து வைத்த சிக்கன் 65 சேர்த்து நன்கு கிளறி, சிறிதளவு நீர் ஊற்றி வேகவைத்து 10 - 20 நிமிடங்களுக்கு பின் எடுத்தால் சுவையான சிக்கன் 65 கிரேவி தயார்.
  • இறக்கும் தருவாயில் கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கி பரிமாறலாம். விருப்பம் இருப்பவர்கள் தக்காளியுடன் தேங்காயும் சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சுவை என்பது மாறுபடும்.