Mysore Rasam: சுவையான மைசூர் ரசம் செய்வது எப்படி? - விவரம் இதோ..!
ஏப்ரல் 01, சென்னை (Kitchen Tips): தென்னிந்திய உணவின் ஒரு பகுதியாக ரசம் உள்ளது. இதில் பலவகையான ரசம் உள்ளன. வழக்கமான தென்னிந்திய ரசம் போல இல்லாமல், மைசூர் ரசம் பருப்புடன் தயாரிக்கப்படுகிறது. இது மிகவும் சுவை மிக்கதாக இருக்கிறது. மைசூர் ரசம் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
பருப்பு வேகவைத்த தண்ணீர் - 3 லிட்டர்
புளி - சிறிதளவு
பூண்டு - 8 பல்
தக்காளி - 4
உளுந்து - 1 கரண்டி
நெய் - 2 கரண்டி
கடுகு - சிறிதளவு
கறிவேப்பில்லை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு. SpaceX Launched Satellites: 23 செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் – ஒரே நேரத்தில் அனுப்பி சாதனை..!
அரைத்துக்கொள்ள வேண்டியவை:
தேங்காய்த்துருவல் - 4 கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கடலைப்பருப்பு - 2 கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் அரைக்க வேண்டியவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து வைத்துக்கொள்ளவும். பின்னர், அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் நெய் ஊற்றி உருகியவுடன் கடுகு, கறிவேப்பில்லை, உளுந்து சேர்த்து தாளித்து, பொடிப்பொடியாக நறுக்கிய தக்காளி, தட்டிய பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இதனுள், புளி தண்ணீரை கரைத்து ஊற்றி, மஞ்சள்தூள், அரைத்து வைத்திருந்த விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். பின்பு, அதில் பருப்பு தண்ணீரை சேர்த்து, சிறிது நேரம் கழித்து நுரைத்து வந்ததும், கொத்தமல்லித்தழைகளை மேலாக தூவிவிட்டு இறக்கவும். இறுதியில், சுவையான மைசூர் ரசம் ரெடி.