Space X Falcon 9 Satellite (Photo Credit: @SpaceX X)

ஏப்ரல் 01, வாஷிங்டன் (World News): உலக நாடுகள் அனைத்தும் விண்வெளி ஆராய்ச்சியில் போட்டிப்போட்டுக்கொண்டு வரும் நிலையில், அமெரிக்காவின் தனியார் நிறுவனம் ஒன்று இதில் இணைந்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி ஆய்வு நிறுவனம் இதில் பெரும்பங்கு வகித்து வருகிறது. இந்த நிறுவனம் சார்பாக 23 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் (Successfully Placed StarLink Satellites Into Orbit) ஒரே நேரத்தில் விண்ணிற்கு செலுத்தப்பட்டன. மேலும், இவை அதன் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. Badam-Tulsi Cold Drink: கோடைக்கு உகந்த, சுவையான பாதாம் துளசி குளிர்பானம் செய்வது எப்படி? – விபரம் உள்ளே..!

இதுதொடர்பாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த செயற்கைக்கோள்கள் நம்ப முடியாத அளவிற்கு அதிவேகமான பிராட்பேண்ட் இணையத்தை வழங்கக்கூடிய திறன் உள்ளது" என அதில் குறிப்பிட்டுள்ளது. புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 வகை ராக்கெட்கள் விண்ணில் அனுப்பப்பட்டது.