Sorakkai Kootu Recipe: சுவையான சுரைக்காய் கூட்டு செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
அருமையான சுவையில் சுரைக்காய் கூட்டு எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
ஆகஸ்ட் 05, சென்னை (Kitchen Tips): சத்து நிறைந்த காய்கறிகளை வைத்து கூட்டு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் வகையில், சுரைக்காய் கூட்டு (Sorakkai Kootu) எப்படி செய்வது என்பதனை இதில் பார்ப்போம். இது செய்வதற்கு மிகவும் எளிமையானது மற்றும் சுரைக்காயில் (Bottle Gourd) நீர்ச்சத்து நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியமானதாகும். சுரைக்காய் கூட்டு தேங்காய், பருப்பு போன்றவற்றை சேர்த்து செய்வதால், இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சுரைக்காய் - 3 கப் (துண்டுகளாக நறுக்கியது)
பாசிப்பருப்பு - அரை கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
அரைக்க தேவையானவை:
துருவிய தேங்காய் - முக்கால் கப்
வரமிளகாய் - 2
சீரகம் - 1 தேக்கரண்டி
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி. Thengai Paal Kozhukattai Recipe: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தேங்காய் பால் கொழுக்கட்டை செய்வது எப்படி..?
தாளிக்க தேவையானவை:
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் சுரைக்காயைப் போட்டு, அதனுடன் நீரில் நன்கு கழுவிய பாசிப்பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து சுமார் 20 நிமிடம் வேகவைக்கவும்.
அடுத்து, அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு அரைத்த பேஸ்ட்டை அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் பருப்புடன் சேர்த்து கிளறிவிட்டு, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, இறக்கி வைத்துள்ள பருப்புடன் சேர்த்து கலந்தால், சுவையான சுரைக்காய் கூட்டு ரெடி.