ஆகஸ்ட் 05, சென்னை (Kitchen Tips): பால் கொழுகட்டை என்பது தென்னிந்திய இனிப்பு வகை ஆகும். இது தேங்காய் பாலில் சமைக்கப்பட்ட சிறிய அரிசி உருண்டைகள் கொண்டு செய்யப்படுகிறது. தேங்காய் பால் கொழுக்கட்டை (Thengai Paal Kozhukattai) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
தேங்காய் - கால் கப்
வெல்லம் - அரை கப்
சர்க்கரை - 2 தேக்கரண்டி
தேங்காய் பால் - அரை கப்
நெய் - 3 தேக்கரண்டி. Thoothuvalai Soup Recipe: மருத்துவ குணமுடைய தூதுவளை சூப் செய்வது எப்படி? விவரம் உள்ளே..!
செய்முறை:
முதலில் அரிசி மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். பின்பு அந்த மாவில் பாதியை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
அதில் மீதம் இருக்கும் மாவில் துருவிய தேங்காய், சர்க்கரை சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
அடுத்து, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் பாலை ஊற்றி சூடேற்ற வேண்டும். பின் அதில் உருட்டிய சிறிய அரிசி உருண்டைகளை இரண்டு பகுதிகளாக சேர்க்கவும். முதலில் கொழுக்கட்டையில் பாதியைச் சேர்த்து, பால் மீண்டும் கொதிக்கும் வரை காத்திருந்து, மீதமுள்ள கொழுக்கட்டை சேர்க்கவும்.
அதன் பிறகு சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்க வேண்டும். பிறகு தீயை குறைத்து கெட்டியான தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கலக்கவும். மேலும் ஒரு நிமிடம் குறைந்த தீயில் சூடாக்கி, தீயை அணைக்கவும். அவ்வளவுதான் சுவையான தேங்காய் பால் கொழுக்கட்டை தயார்.