Sweet Banana Balls: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ரெசிபி.. வாழைப்பழ ஸ்வீட் உருண்டை செய்வது எப்படி..?
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் வாழைப்பழ ஸ்வீட் உருண்டை எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
டிசம்பர் 24, சென்னை (Kitchen Tips): கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வீட்டில் ஸ்வீட்ஸ், பலகாரங்கள் மற்றும் கேக் வகைகள் செய்து சாப்பிடுவர். அந்த வகையில் வீட்டில் வாழைப்பழமும், 1 கப் அரிசியும் இருந்தால் அற்புதமான சுவையில் ஸ்வீட் உருண்டை செய்யலாம். இந்த வாழைப்பழ ஸ்வீட் உருண்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். வித்தியாசமாக ஆரோக்கியமான வாழைப்பழம் ஸ்வீட் உருண்டை (Vazhaipala Urundai) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். Kathirikai Mor Curry Recipe: கத்திரிக்காய் மோர் கறி சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
பெரிய வாழைப்பழம் - 2
புழுங்கல் அரிசி - 1 கப்
முந்திரி, பாதாம் - தலா 5
ஏலக்காய் - 3
துருவிய தேங்காய் - 1 கப்
நாட்டுச் சர்க்கரை - அரை கப்
நெய் - 1 மேசைக்கரண்டி
தேங்காய் - சிறிது (துருவியது)
செய்முறை:
- முதலில் வாழைப்பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 5 முதல் 8 நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் புழுங்கல் அரிசியை போட்டு நிறம் மாறும் வரை நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
- பின்பு மிக்ஸியில் வறுத்த அரிசி, முந்திரி, பாதாம், ஏலக்காய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, பிறகு ஒரு பாத்திரத்தில் வேகவைத்த வாழைப்பழத்தை தோலை நீக்கிவிட்டு எடுத்துக்கொள்ளவும்.
- பின் அந்த வாழைப்பழத்தை மத்து கொண்டு நன்கு மசித்துக் கொள்ளவும். பின்பு, அதில் அரைத்த அரிசி மாவை சேர்த்து, அத்துடன் துருவிய தேங்காய் நாட்டுச்சர்க்கரை மற்றும் 1 மேசைக்கரண்டி நெய் ஊற்றி கைகளால் நன்கு பிசைய வேண்டும்.
- இதனையடுத்து, பிசைந்ததை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, தேங்காய் துருவலில் பிரட்டி எடுத்தால் சுவையான வாழைப்பழ உருண்டை தயார்.