Kathirikai Mor Curry (Photo Credit: YouTube)

டிசம்பர் 23, சென்னை (Kitchen Tips): நம் வீட்டில் சமையல்களில் பெரும்பாலும் கத்திரிக்காய் பயன்படுத்துவோம். சாம்பார், புளிக்குழம்பு என கிராமத்தில் கத்திரிக்காய் ரெசிபிகள் ஏராளம். அந்தவகையில், கத்திரிக்காய் வைத்து சுவையான கத்திரிக்காய் மோர் கறி (Kathirikai Mor Curry) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். Urulai Kilangu Kara Kari Recipe: உருளைக்கிழங்கு வைத்து இப்படி செஞ்சு பாருங்க.. அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 5

தயிர் - 1 கப்

துருவிய தேங்காய் - 1 கப்

கடலைப்பருப்பு - 1 கரண்டி

துவரம் பருப்பு - 1 கரண்டி

சீரகம் - முக்கால் கரண்டி

வரக்கொத்தமல்லி - அரை கரண்டி

மஞ்சள் தூள் - அரை கரண்டி

சாம்பார் தூள் - கால் கரண்டி

சின்ன வெங்காயம் - 10

பச்சைமிளகாய் - 5

இஞ்சித் துண்டு - 1 இன்ச்

கல் உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையானவை:

தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

கடுகு - 1 கரண்டி

பெருங்காயத்தூள் - அரை கரண்டி

உளுத்தம் பருப்பு - அரை கரண்டி

வரமிளகாய் - 2

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

  • முதலில் ஒரு கப் தயிரை கடைந்து கொள்ளவும். பின் வரக்கொத்தமல்லி கடலைப்பருப்பு துவரம் பருப்பு வரமிளகாய் சீரகம் இவை நான்கையும் தண்ணீர் ஊற்றி கழுவி, கடுகு தண்ணீரில் அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி, பச்சை மிளகாய் வதக்கிக் கொள்ளவும். இவை இரண்டையும் தேங்காய் சேர்த்து ஊற வைத்த பொருட்களுடன் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அரைத்த விழுதை கடைந்த தயிரில் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் நுரை பொங்க கொதிக்கவிடவும். தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • கத்திரிக்காயை பொடியாக அரிந்து தண்ணீர் சேர்த்து கால் கரண்டி சாம்பார் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். வேகவைத்த காயை தண்ணீர் வடித்து மோர் குழம்பில் சேர்க்கவும். தேங்காய் எண்ணெயில் தாளிக்க கூடிய பொருட்களை தாளித்து குழம்பில் சேர்க்கவும். அவ்வளவுதான் சுவையான கத்திரிக்காய் மோர் கறி தயார்.