Vegetable Pakoda Recipe: மொறுமொறுப்பான வெஜிடபுள் பக்கோடா செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
சுவையான வெஜிடபுள் பக்கோடா எப்படி செய்து சாப்பிடுவது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
மே 24, சென்னை (Kitchen Tips): தினசரி மாலையில் டீ, காபி குடிக்கும் போது, சூடாக ஏதேனும் மொறுமொறுப்பாக செய்து சாப்பிடத் தோன்றும். அப்போது பஜ்ஜி, போண்டா, பக்கோடா ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை செய்து சாப்பிடுவோம். அதிலும், பக்கோடா என்றால் வெங்காய பக்கோடாவைத் தான் அதிகம் செய்வோம். அந்த வகையில், வீட்டில் உள்ள ஒருசில காய்கறிகளைக் கொண்டு எப்படி சுவையான பக்கோடா (Vegetable Pakoda) செய்வது என்பதனை இதில் பார்ப்போம். Attempted Murder Of Teenager: முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து; இருவர் கைது..!
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்
சோம்பு - 1 தேக்கரண்டி (அரைத்தது)
ஓமம் - 1 தேக்கரண்டி
துருவிய பன்னீர் - 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கத்திரிக்காய், கேரட், வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் - தலா 1 (நீளமாக மற்றும் மெல்லிசாக நறுக்கவும்)
கொத்தமல்லி, வெந்தயக் கீரை - சிறிதளவு
தண்ணீர், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பவுலில் நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் ஒன்றாக போட்டுக் கொள்ளவும். பின்னர், அதில் கடலை மாவு, ஓமம், சோம்பு, மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு, அதில் தண்ணீர் ஊற்றி, பக்கோடா பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள பக்கோடா கலவையை எண்ணெயில் தூவி பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான மொறுமொறுப்பான வெஜிடபுள் பக்கோடா ரெடி.