மே 24, அபிராமபுரம் (Chennai News): சென்னையில் உள்ள மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம், ‘U’ பிளாக்கில் வசித்து வருபவர் மௌலி (வயது 25). இவர், கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மே 22-ஆம் தேதி இரவு, விசாலாட்சி தோட்டம் சந்தை அருகே நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் மற்றும் வீரா ஆகிய இருவரும் மௌலியை வழிமறித்து தகராரில் ஈடுபட்டனர். பின்னர், கத்தியால் தாக்கிவிட்டு (Stabbing) அங்கிருந்து அவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். Vivo S19 Series: விவோ S19 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் சீனாவில் விரைவில் அறிமுகம்..! அதிகாரபூர்வ அறிவிப்பு தேதி வெளியீடு..!
இதனையடுத்து, படுகாயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து, E-4 அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின்பேரில், கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட விசாலாட்சி தோட்டம், ‘X’ பிளாக்கில் வசித்து வந்த புருஷோத்தமன் (வயது 25) மற்றும் வீரா (வயது 24) ஆகியோர இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 1 இருசக்கர வாகனம் மற்றும் கத்தி ஆகியவற்றை கைப்பற்றினர்.
மேலும், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், மெளலி என்பவர் ஏற்கனவே புருஷோத்தமனின் மைத்துனரை தாக்கியுள்ளதால், அதற்கு பதிலடி தரும் வகையில் புருஷோத்தமன் மற்றும் அவரது நண்பர் வீரா ஆகிய இருவரும் சேர்ந்து மௌலியை கத்தியால் குத்திக்கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்துள்ளது. ஏற்கனவே புருஷோத்தமன் மீது 3 அடிதடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.