Vendakkai Podi Curry Recipe: வெண்டைக்காய் பொடி கறி ருசியாக செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் வெண்டைக்காய் பொடி கறி ருசியாக எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காண்போம்.
நவம்பர் 29, சென்னை (Kitchen Tips): வெண்டைக்காய் (Okra), சமையலுக்கு பயன்படுத்தும் பொதுவான காய்கறி தான். வெண்டைக்காயில் (Vendakkai) கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்துகள் ஆகியவை அடங்கியுள்ளன. பொதுவாக, வெண்டைக்காய் அனைவருக்கும் பிடிக்காது. இதனை எப்போதும் போல ஒரே மாறி செய்யாமல், சற்று வித்தியாசமாக வெண்டைக்காய் ப்ரை ஆக செய்து சாப்பிடலாம். இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என அனைத்திற்கும் அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும். மேலும், இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். முக்கியமாக குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் ருசியாக இருக்கும். அப்படிபட்ட வெண்டைக்காய் பொடி கறி (Vendakkai Podi Curry) சுவையாக எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். Mango Pickle Recipe: கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 15
பெரிய வெங்காயம் - 1
கடலை மாவு - 1 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
தண்ணீர் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் வெண்டைக்காயை நன்கு நீரில் கழுவி, அதை துடைத்துவிட்டு, மெல்லிய சிறு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின் நறுக்கிய அந்த வெண்டைக்காயுடன் மஞ்சள் தூள், கடலை மாவு சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும்.
- பின்பு, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், இந்த வெண்டைக்காயை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ப்ரை செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பிறகு, அதே பாத்திரத்தில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.
- பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 1 நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்கி, 1 மேசைக்கரண்டி நீரை ஊற்றி, பச்சை வாசனை போக வதக்கவும்.
- பின்னர், அதில் ப்ரை செய்து வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து நன்கு ஒருசேர வதக்கி இறக்கினால், சுவையான வெண்டைக்காய் பொடி கறி ரெடி.